Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் 1 வருடத்தில்.. டிரம்ப்பின் கொட்டத்தை அடக்க போகும் 5 நாடுகள்.. பிரிக்ஸ் எடுத்த பிரம்மாஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, BRICS கூட்டமைப்பு நாடுகள் புதியதொரு டிஜிட்டல் நாணயத்தை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த டிஜிட்டல் நாணயத்தின் வருகை உலக நாணய சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் நாணயம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம்.

donald trump BRICS Narendra Modi

கடந்த 2023ம் வருடம் நடக்கும் கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.இதன் மூலம் உலகின் 30 சதவிகித பொருளாதாரத்தை பிரிக்ஸ் நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன.

விரிவாக்கப்பட்ட BRICS இன் GDP (தற்போதைய நிலை).

பிரேசில்: $2.1 டிரில்லியன்
ரஷ்யா: $2 டிரில்லியன்
இந்தியா: $3.7 டிரில்லியன்
சீனா: $19.3 டிரில்லியன்
தென்னாப்பிரிக்கா: $0.4 டிரில்லியன்

அர்ஜென்டினா: $0.6 டிரில்லியன்
எகிப்து: $0.4 டிரில்லியன்
எத்தியோப்பியா: $0.15 டிரில்லியன்
ஈரான்: $0.36 டிரில்லியன்
சவுதி அரேபியா: $1 டிரில்லியன்
அமீரகம்: $0.5 டிரில்லியன்

மொத்தம்: $30.5 டிரில்லியன் (உலகப் பொருளாதாரத்தில் 30%)

பிரிக்ஸ் கரன்சி

இதில் பிரிக்ஸ் கரன்சி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் ஆலோசனை செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, BRICS கூட்டமைப்பு நாடுகள் புதியதொரு டிஜிட்டல் நாணயத்தை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன.

பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது.

BRICS நாடுகளுடனான வர்த்தகம்

முன்னதாக, ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க வங்கிகளுக்கு முன்அனுமதி தேவையில்லை. இனி, வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் வர்த்தக செட்டில்மென்டுகளை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ தங்கள் நாணயத்தை அமெரிக்க டாலராக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் வோஸ்ட்ரோ கணக்கில் உள்ள இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம். இது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.

டாலருக்கு மாற்று

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களின் மீது 50% வரி விதித்ததற்குப் பிறகு இந்த கொள்கை அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாயை வலுப்படுத்தும் இம்முயற்சி, அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசின் நேரடிப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.

BRICS நாடுகளுடன் மட்டுமல்லாமல், இந்திய ரூபாயில் நேரடியாகப் பணம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும் சுற்றறிக்கையை இந்தியா பல நாடுகளுக்கும் அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் சர்வதேச வர்த்தக நிலையில் முக்கிய பங்காற்றுவதோடு, உலகச் சந்தைகளில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+