பிபிக்கு உடனே போன் பண்ணுங்க.. போரை நிறுத்த ஈரானிடம் கெஞ்சிய அதிபர் டிரம்ப்! நடு இரவில் நடந்தது என்ன?
டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும்படி அமெரிக்கா அதிபர் டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தை முழுமையாக விழுங்கும் அபாயத்தை உணர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சமாதான உடன்படிக்கைக்கு சம்மதிக்க வைத்தார். அதோடு ஈரானிடம் இது தொடர்பாக விடாமல் கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தலையீடும் போர் நிறுத்த முயற்சியும்
ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுத்து உள்ளது. நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

6 ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் கத்தாரில் தாக்குதல் நடத்தியது. ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப் இதையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர் கிட்டத்தட்ட அதிர்ச்சியில் உறைந்து.. தற்போது போரை நிறுத்துங்கள் என்று இறங்கி வந்துள்ளார்.
டிரம்ப் எதிர்பார்க்கவில்லை
இதை எதிர்பார்க்காத டிரம்ப்.. போர் இன்னும் தீவிரம் அடைவதை தடுக்கும் விதமாக நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றையும் நியமித்தார்.
அதன்பின், டிரம்ப் அதிகாரிகளிடம், "உடனே போனில் பிபி-யை (பெஞ்சமின் நெதன்யாகு) அழைக்கச் சொல்லுங்கள், நாம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தப் போகிறோம்" என்று கூறியதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். அந்த போன் காலில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த விரும்புவதாகவும் அமெரிக்காவிடம் தெரிவித்தது.
ஈரான் இஸ்ரேலைத் தாக்காத வரை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளலாம் என்று நெதன்யாகு பதிலளித்தார். இதையடுத்து ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்ட குழு அவர்களிடம் போரை நிறுத்த கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. போர் நிறுத்தத்தை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தரப்பு கிட்டத்தட்ட கெஞ்சியதாக கூறப்படுகிறது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சவாலாக இருந்தது. அமெரிக்கா மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசியதால் ஈரான் பதிலடி கொடுக்கத் தயாராக இருந்தது. கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது. பல மத்திய கிழக்கு நாடுகள் ஈரானை சமாதானம் செய்ய முன்வந்தன.
இதையடுத்து டிரம்ப் கத்தார் எமிருடன் பேசி ஈரானை சமாதானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முக்கியமாக, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், கத்தார் பிரதமரின் அலுவலகத்துடன் போனில் பேசி ஈரானை சமாதானம் செய்ய தீவிரமாக முயன்றார்.
வான்ஸை தவிர, வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கத்தார் பிரதமருடன் பேசிய பிறகு, ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படி இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும்படி அமெரிக்கா அதிபர் டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications