டீலில் விட்ட டிரம்ப்! ஐரோப்பிய நாடுகள் vs ரஷ்யா.. எந்த நாட்டின் கை ஓங்கும்? தெரிஞ்சுக்கோங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சமீபத்தில் வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியில் முடிந்திருந்தது ஒருபுறம் என்றாலும், மறுபுறம் நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் பேசி வருவது ஐரோப்பிய நாடுகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

நேட்டோவிலிருந்து அமெரிக்கா கழன்றுவிட்டால், ஐரோப்பிய நாடுகள் தனியாக ரஷ்யாவை எதிர்கொள்ளுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான வாய்ப்புகள் என்ன? யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Russia Europe

டிரம்ப் என்ன பேசினார்?:

நேட்டோவில் மொத்தம் 32 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளின் பாதுகாப்புக்கு நாங்கள் ஏன் தண்ட செலவு செய்ய வேண்டும்? வேணும்னா நீங்களே உங்களை பாதுகாத்துக்கோங்க. இல்லை.. அமெரிக்கா கண்டிப்பா கூட இருக்குனும்னு நீங்க யோசிச்சா, நேட்டோவுக்கான செலவை அதிகரிக்கனும். ஒவ்வொரு நாடும் தங்கள் GDP-யிலிருந்து 5% நிதியை பாதுகாப்புக்காக ஒதுக்கினால் அமெரிக்கா கூட இருக்கும் என்கிற தொணியில் டிரம்ப் பேசியிருந்தார்.

மட்டுமல்லாது நேட்டோவிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளவே முயற்சிக்கிறது என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். காரணம் அமெரிக்காவின் முதலீடுகள் இந்தோ-பசிபிக் பகுதியில் குவிக்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். இதன் மூலம் சீனாவின் வளர்ச்சிக்கு சவால் விட முடியும்.

ஐரோப்பிய நாடுகளின் பலம் என்ன?:

டிரம்ப் இப்படி யோசிக்க, ஐரோப்பிய நாடுகள் தற்போது கவலையில் இருக்கின்றன. நேட்டோவுக்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை கொடுத்திருக்கின்றன.

போலந்து - 4.1%
எஸ்டோனியா மற்றும் அமெரிக்கா - 3.4%
இங்கிலாந்து - 2.3%

இந்த நாடுகள் தங்கள் GDP-லிருந்து மேற்குறிப்பிட்ட அளவுக்கு நிதியை ஒதுக்கியுள்ளன. நேட்டோவுக்கு ஆகும் செலவில் அமெரிக்காவும் ஜெர்மனியும் 16% அளவுக்கு நிதியை கொடுக்கிறது. மற்ற நாடுகள் பெரும்பான்மையாக நிதியை ஒதுக்கியுள்ளன. ஆக இதுதான் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை. உக்ரைன் போருக்கு

ஜெர்மனி - 18 பில்லியன் டாலர்
இங்கிலாந்து - 15.4 பில்லியன் டாலர்
டென்மார்க் - 8.4 பில்லியன் டாலர்
நெதர்லாந்து - 7.7 பில்லியன் டாலர்
ஸ்வீடன் - 5.7 பில்லியன் டாலர்
பிரான்ஸ் - 5.1 பில்லியன் டாலர்

என நிதியை கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் வைத்து ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன.


ஐரோப்பிய நாடுகள் vs ரஷ்யா:

ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவழிக்கும் நிதி மற்றும் பாதுகாப்பு கருவிகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு

இராணுவ பட்ஜெட் - $300.8 பில்லியன்
ராணுவ வீரர்கள் - 1,298,969
ரிசர்வ் வீரர்கள் - 1,750,132
டாங்கிகள் - 4,377
கவச சண்டை வாகனங்கள் - 30,510
மொத்த பீரங்கிகள் - 6,416
ராக்கெட் பீரங்கிகள்- 778
மொத்த விமானங்கள் - 5,392
ஹெலிகாப்டர்கள் - 2,330
கடற்படைக் கப்பல்கள் - 1,385
விமானம் தாங்கிக் கப்பல்கள் - 3
போர்க்கப்பல்கள் - 78
நீர்மூழ்கிக் கப்பல்கள் - 59
அணு ஆயுதங்கள் - 519

ரஷ்யாவின் படை பலம் பின்வருமாறு

இராணுவ பட்ஜெட் - $86.4 பில்லியன்
ராணுவ வீரர்கள் - 1,000,000
ரிசர்வ் வீரர்கள் - 2,000,000
டாங்கிகள் - 12,267
கவச சண்டை வாகனங்கள் - 24,172
மொத்த பீரங்கிகள் - 18,266
ராக்கெட் பீரங்கிகள்- 4,331
மொத்த விமானங்கள் - 4,418
ஹெலிகாப்டர்கள் - 1,665
கடற்படைக் கப்பல்கள் - 653
விமானம் தாங்கிக் கப்பல்கள் - 1
போர்க்கப்பல்கள் - 11
நீர்மூழ்கிக் கப்பல்கள் - 66
அணு ஆயுதங்கள் - 5,889

இரண்டையும் ஒப்பிடும்போது ரஷ்யா குறைந்த அளவுக்கு ராணுவ பலத்தை கொண்டிருப்பதை போல தொன்றுகிறது. ஆனால், ரஷ்யாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை மிகப்பெரியது. போரில் வெற்றி தோல்வியை இதுதான் தீர்மானிக்கும் என்பதால் தனியாக ஐரோப்பிய நாடுகளால் ரஷ்யாவை எதிர்கொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+