ஈகோ.. அமெரிக்காவை வீழ்த்த பிளான் போட்டதா சீனா.. கொரோனா தோன்றியது எப்படி? வெளியாகும் விவரங்கள்!

அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை மற்றும் சண்டை காரணமாக சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை மற்றும் சண்டை காரணமாக சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் வெளியானது எப்படி என்பது குறித்து இரண்டு விதமான ஆய்வு முடிவுகளை அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

Recommended Video

    திடீரென 50% பலி எண்ணிக்கையை உயர்த்திய சீனா... என்ன காரணம்?

    கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த வைரஸின் தோற்றம் குறித்த கேள்வி இன்னும் மர்மமாகவே உள்ளது .இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று விசாரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    இந்த கொரோனாவின் தோற்றம் குறித்து ஏற்கனவே அமெரிக்கா நாட்டு உளவுத்துறை விசாரிக்க தொடங்கிவிட்டது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் பேசியதாக கூறப்படுகிறது.

    கட்டுரைகள் வந்துள்ளது

    கட்டுரைகள் வந்துள்ளது

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பிரபல ஆங்கில செய்தி ஊடகமான பாக்ஸ் (FOX) செய்தி நிறுவனம் முக்கியமான ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறது. சீன அரசிடம் இருந்தும், சீனாவில் வுஹனில் இருக்கும் வுஹன் வைராலஜி நிறுவனம் எனப்படும் வைரஸ் சோதனை மையத்தில் இருந்தும் கசிந்த கோப்புகள் மற்றும் தகவல்களை வைத்து இந்த கட்டுரையை பாக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வைரஸ் சோதனை மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகி உள்ளதாக அந்த ஆய்வு கட்டுரையில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    என்ன ஆய்வு மையம்

    என்ன ஆய்வு மையம்

    1990 களில் இருந்து பயோ ஆயுதங்களை தயாரிப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக அந்நாடு வுஹன் நகரில் இருக்கும் பயோ ஆராய்ச்சி நிறுவனத்தை 2015ல் புதுப்பித்தது. அங்கு இருக்கும் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில்தான் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது. சீனாவின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் நிறைய ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக புகார் உள்ளது.

    அமெரிக்கா குற்றச்சாட்டு

    அமெரிக்கா குற்றச்சாட்டு

    இந்த வைரஸ் சோதனை மையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை. அங்கு வைரஸ் லீக்காக வாய்ப்புகள் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் போதுமான பாதுகாப்போடு சோதனைகளை செய்யவில்லை என்று ஏற்கனவே புகார் உள்ளது. இங்கிருந்து வைரஸ் கசிந்து இருக்கும் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 2018லேயே அமெரிக்கா அந்த ஆராய்ச்சி மையத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்த புகாரை வைத்து இருந்தது. அதோடு உலக நாடுகளும் அமெரிக்காவும் சேர்ந்து உங்களுக்கு உதவும். உங்கள் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜி நிறுவனத்தை புதுப்பிக்க நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறியது.

    சீனா ஏற்றுக்கொள்ளவில்லை

    சீனா ஏற்றுக்கொள்ளவில்லை

    ஆனால் சீனா இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. நாங்களே எங்களின் சோதனை மையத்தை புதுப்பித்துக் கொள்வோம். இது பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று சீனா தெரிவித்தது. சீனாவின் இந்த ஈகோதான் வைரஸ் பரவ முக்கியமான காரணமாக இருக்கும் என்று பாக்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விஷயம் இதுதான், சீனாவில் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில் இருந்துதான் கொரோனா கசிந்து இருக்கும்.

    கொரோனா கசிவு

    கொரோனா கசிவு

    வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில் ஒரு விஞ்ஞானிதான் இந்த கொரோனா வைரஸ் தாக்கிய முதல் நபர். அவர் தவறுதலாக வெளியே சென்று வைரஸை பரப்பிவிட்டு இருக்கிறார். இந்த சோதனை கூடம் பாதுகாப்பானது இல்லை என்று அமெரிக்கா கூறியது. ஆனால் சீனா அதை கேட்காமல் தொடர்ந்து சோதனைகளை அங்கு செய்து வந்தது. இதன் முடிவில் தற்போது அங்கிருந்து வைரஸ் கசிந்து இருக்கிறது, இது முழுக்க முழுக்க ஈகோவால் வந்த பிரச்சனை என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

    இன்னொரு திட்டம் என்ன

    இன்னொரு திட்டம் என்ன

    இந்த வைரஸ் எப்படி பரவி இருக்கலாம் என்று இன்னொரு ஆதாரத்தையும் அந்த பாக்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கா மீது சீனா கோபத்தில் இருந்தது. டிரேட் வார் உள்ளிட்ட பல விஷயங்களால் சீனா அமெரிக்கா மீது கோபத்தில் இருந்தது. இதனால் சீனா தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. மருத்துவ துறையிலும், நோய்களை கட்டுப்படுத்துவதிலும் நாங்கள்தான் சிறந்தவர்கள். நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று சீனா அமெரிக்காவிற்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளது.

    வேண்டும் என்றே பரப்பியது

    வேண்டும் என்றே பரப்பியது

    இதனால் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இதனால் சீனாவில் சோதனை கூடத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியேற்றப்பட்டு இருக்கலாம். அமெரிக்காவை விட நாங்கள் வலிமையானவர்கள் என்பதை நிரூபிப்பதற்காக சீனா இதை பரப்பி உள்ளது என்று அந்த பாக்ஸ் கட்டுரையில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அதே போல் கொரோனாவை கட்டுப்படுத்தி நாங்கள்தான் வலிமையானவர்கள் என்பதை சீனா நிரூபித்து விட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    கடும் எச்சரிக்கை

    கடும் எச்சரிக்கை

    இதனால்தான் இதை பற்றி விசாரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் துணை அதிபர் மைக் பாம்பியோ வெளிப்படையாக, கொரோனா வைரஸ் வுஹனில் இருந்து தோன்றியது என்று எங்களுக்கு தெரியும். அதேபோல் அங்குதான் இந்த வைரஸ் ஆராய்ச்சி மையம் இருக்கிறது என்றும் தெரியும், இதை நாம் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+