சீனாவை அடுத்து.. அமெரிக்காவில் திடீரென தலை தூக்கும் ஸ்டெல்த் ஓமிக்ரான்.. அறிகுறிகள் என்ன தெரியுமா?
நியூயார்க்: சீனாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,280 கேஸ்கள் பதிவாகி உள்ளன.
கொரோனா பெருந்தொற்று உருவான பின் சீனாவில் ஒரே நாளில் பதிவான அதிக அளவிலான கேஸ்கள் இதுதான். அங்கு 3,507 உள்ளூர் கேஸ்கள் பதிவாகி உள்ளன. வடகிழக்கு மாகாணமான சாங்சுன் பகுதியில் இந்த கேஸ்கள் பதிவானது. இதனால் மொத்தமாக சாங்சுன் மாகாணம் லாக்டவுன் செய்யப்பட்டது.
கடந்த திங்கள் கிழமை அங்கு 5500 கேஸ்கள் பதிவானது. இதனால் 4 மாகாணங்களில் அங்கு முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. ஸ்டெல்த் ஓமிக்ரான் காரணமாக அங்கு இவ்வளவு கேஸ்கள் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஓமிக்ரான் கொரோனாவின் BA.2 திரிபுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும்.

ஸ்டெல்த் ஓமிக்ரான்
தற்போது அமெரிக்காவிலும் ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 25,359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் இது அதிக அளவிலான கொரோன பாதிப்பு ஆகும். ஏற்கனவே உக்ரைன் போர், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்காவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்தான இப்போது ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் அங்கு பரவ தொடங்கி உள்ளன.

எங்கு பரவுகிறது?
முக்கியமாக நியூயார்க், நியூ ஜெர்சி, விர்ஜின் தீவு ஆகிய இடங்களில் ஸ்டெல்த் ஓமிக்ரான் அதிக அளவில் பதிவாகி வருகிறது. அங்கு புதிதாக பதிவாகும் கொரோனா கேஸ்களில் 37 சதவிகிதம் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இதனால் விரைவில் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் அமெரிக்காவில் ஆதிக்கம் மிக்க வைரஸாக உருவெடுக்கும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் இது நான்காம் அலையை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனை கேஸ்கள்
அமெரிக்காவில் தற்போது 23,796,184 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இது போக ஜெர்மனியில் தினசரி கேஸ்கள் 225,387 ஆக உள்ளது. பிரான்சில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. ஆர்டிபிஆர் சோதனையில் BA.2 வகை ஓமிக்ரானை உறுதி செய்ய முடியாது என்பதால்.. இதற்கு ஸ்டெல்த் ஓமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது வேகமாக பரவும் திறன் கொண்டதுஎன்பது குறிப்பிடத்தத்க்கது. அதாவது இந்த ஸ்டெல்த் வகையில் எஸ் ஜீன் இருக்கிறது. இதனால் ஆர்டிபிசிஆர் சோதனையில் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.

அச்சம்
ஒவ்வொருமுறையும் இதற்கு தனியாக ஜீன் சோதனை செய்ய வேண்டும். ஆனால் இதனால் இதுவரை சீனாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதேபோல் ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதித்தவர்களும் தீவிரமான நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கவில்லை என்று கூறப்படுகிறது. மிகவும் லேசான அறிகுறிகளே இதில் ஏற்படுகின்றன. சலேத் ஓமிக்ரான் வந்த பலருக்கு மூச்சு இறைப்பு, ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற அறிகுறிகள், பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. மற்றபடி தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

இந்தியா பாதுகாப்பு
முன்னதாக ஜூன் மாதம் கொரோனா 4ம் அலை ஏற்படும் என ஐஐடி கான்பூர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவின் கோவிட் 19 டாஸ்க் போர்ஸ் தலைவர் நரேந்திர குமார் அரோரா அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் 4ம் அலை ஏற்பட வாய்ப்பு குறைவு. ஸ்டெல்த் ஓமிக்ரான் இந்தியாவில் பரவும் வாய்ப்புகள் மிக குறைவு. கடந்த மூன்றாம் அலையின் போதே பலருக்கு ஸ்டெல்த் ஓமிக்ரான் ஏற்பட்டது. கடந்த மூன்றாம் அலையின் போது 75%. சதவிகித பாதிப்புகள் BA.2 பாதிப்புகள்தான் இதனால் மீண்டும் இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவும் வாய்ப்புகள் குறைவு. சீனாவில் முதியவர்களுக்கு குறைவாகவே வேக்சின் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு புதிய அலை ஏற்பட்டு இருக்கும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications