உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது
நியூயார்க்: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 08,145 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் உலக நாடுகள் பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்தை நாசமாக்கிய மிக மோசமான தொற்று நோய் கொரோனா.
உலக நாடுகளில் கொரோனாவால் மிக அதிகமான துயரைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்தம் 6,14,2466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையோ 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,407 பேர் பலியாகினர். இங்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,064.

ஒரே நாளில் அதிர்ச்சி தரும் மரணங்கள்
அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் 21,067 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலியில் மொத்தம் 1,62,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், இத்தாலியில் நேற்று மட்டும் 602 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் கொரோனாவால் மாண்டவர்கள் எண்ணிக்கை 18,255. இங்கு இத்தாலியை விட மிக அதிக அளவில் அதாவது 1,74,060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜெர்மனி
பிரான்ஸும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பில் ஏறத்தாழ சம அளவில் உள்ளன. பிரான்ஸில் 1,43,303 பேரும் ஜெர்மனியில் 1,32,210 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் பிரான்ஸில் கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,729. ஜெர்மனியில் உயிரிழப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது. இங்கு மொத்தம் 3,495 பேர் மரணமடைந்தனர்.

இங்கிலாந்திலும் உக்கிரம்
கொரோனா தனது உக்கிரத்தைக் காட்டிய தேசங்களில் ஒன்று இங்கிலாந்து. அரச குடும்பத்தினரையும் பிரதமரையும் கூட கொரோனா பாடாய்படுத்தி விட்டது. கொரோனாவால் 93,873 பேர் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில் மொத்தம் 12,107 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,341 மட்டுமே. ஈரானில் 4,683 பேரும் பெல்ஜியத்தில் 4,157 பேரும் கொரோனாவால் மரணித்துப் போயிருக்கின்றனர்.

20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்தம் 20, 08,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,27,146 ஆகவும் உயர்ந்துள்ளது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications