சீனாவை விட மோசம்.. மோசமாக திணறும் ஈரான், இத்தாலி, தென் கொரியா.. கொரோனா களநிலவரம் என்ன?
ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது.
நியூயார்க்: ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது. அமெரிக்காவிலும் இந்த வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க 106065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டள்ளனர். கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளில் தீவிரம் அடைந்து வருகிறது. சீனாவில்தான் அதிகபேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் 86045 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3600 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர் . சீனாவில் 3095 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

வேறு எங்கு
சீனாவிற்கு அடுத்தப்படியாக தென் கொரியாவில்தான் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 7200 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. அங்கு 66 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியாவை அடுத்து ஈரானில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் 6000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஈரான் எப்படி
அங்கு மொத்தம் 51 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இதில் இரண்டு எம்பிக்கள் அடக்கம். ஈரான் இதனால் அங்கு வைரஸை கட்டுப்படுத்த புதிய முறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியில் 6300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 230ஐ தாண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலி
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் 19 பேர் இந்த வைரசால் பலியாகி உள்ளனர். மொத்தம் அமெரிக்காவில் 76 பேருக்கு வைரஸ் பாதித்துள்ளது. நியூயார்க்கில் இதனால் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் 45 பேர்க்கு வைரஸ் பரவி உள்ளது. இதில் 15 பேர் உயிருக்கு போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நிலை
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. லடாக்கில் இருவருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.இவர் கடந்த சில வாரங்கள் முன் தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று திரும்பி உள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications