Omicron கொரோனா: "அந்த" புதிருக்குத்தான் இன்னும் பதில் தெரியவில்லை.. 2 ஆய்வுகள் சொல்லும் குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஓமிக்ரான் பரவல் தொடங்கியதில் இருந்தே அதன் வீரியத்தன்மை தொடர்பான நிறைய சந்தேகங்கள், கேள்விகள் உலவி வருகின்றன. ஓமிக்ரான் கொரோனாவானது டெல்டாவை விட 3 மடங்கு வேகமாக பரவுகிறது. 3 மடங்கு அதிக வேகத்தில் கேஸ்களை ஏற்படுத்துகிறது.

ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் இதனால் அதிக அளவில் மக்கள் மருத்துவமனையில் அனுமதியாகவில்லை. அதாவது மருத்துவமனையில் அனுமதி ஆகும் அளவிற்கு மோசமான பாதிப்புகளை இன்னும் இது பல நாடுகளில் ஏற்படுத்தவில்லை.

இதனால் டெல்டாவை விட ஓமிக்ரான் கொஞ்சம் வீரியம் குறைந்த கொரோனாவாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வுகள் டெல்டாவை விட ஓமிக்ரான் வேகமாக இருந்தாலும், வீரியம் குறைவானதாகவே இது இருக்கும் என்று கூறியது.

தென்னாபிரிக்கா கேஸ்கள்

தென்னாபிரிக்கா கேஸ்கள்

தென்னாப்பிரிக்காவில் மக்கள் பெரிய அளவில் மருத்துவமனையில் அனுமதி ஆகாமல், மைல்டு கேஸ்களால் பாதிக்கப்பட்டதை வைத்து அந்நாட்டு சுகாதாரத்துறை இப்படி கூறியது. ஆனால் உலக சுகாதார மையம் இதை மறுத்தது. டெல்டாவை விட ஓமிக்ரான் ஆற்றல் குறைவானது என்று சொல்ல முடியாது. இதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இப்போதே முடிவிற்கு வந்துவிட முடியாது. இது வேகமாக பரவுகிறது என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கூறியது.

ஸ்காட்லாந்து ஆய்வு

ஸ்காட்லாந்து ஆய்வு

இந்த நிலையில்தான் தற்போது வெளியாகி உள்ள, இரண்டு ஆய்வுகளில் ஓமிக்ரான் ஆற்றல் குறைவானதாக இருக்கலாம் என்ற நல்ல செய்தி சொல்லப்பட்டு உள்ளது. முதல் ஆய்வு ஸ்காட்லாந்தில் மூத்த மருத்துவர் ஜிம் மெக்மேனாமின் குழு நடத்திய ஆய்வு ஆகும். கடந்த நவம்பர் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் தொடக்கம் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதன்படி டெல்டாவை விட 3 மடங்கு வீரியம் குறைவானதாக ஓமிக்ரான் இருந்துள்ளது. டெல்டாவை விட பலர் வேகமாக பாதிக்கப்பட்டாலும் 3 மடங்கு குறைவான ஓமிக்ரான் கேஸ்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ஆய்வு

இங்கிலாந்து ஆய்வு

இன்னொரு பக்கம் இங்கிலாந்தில் இம்பெரியல் கல்லூரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், டெல்டாவோடு ஒப்பிடும் போது 20-25 சதவிகிதம் குறைவாகவே ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு மருத்துவரை சந்திக்க செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் டெல்டாவோடு ஒப்பிடும் போது 40-45 சதவிகிதம் குறைவாகவே ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மருத்துவரை பார்ப்பதும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவது ஓமிக்ரானில் குறைவாக இருப்பதாக ஆய்வு கூறியுள்ளது.

ஆனால் சிறிய ஆய்வு

ஆனால் சிறிய ஆய்வு

இந்த ஆய்வுகள் இரண்டும் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டுமே சிறிய அளவிலான ஆய்வுதான். அதிலும் ஓமிக்ரான் பரவல் தொடக்கத்தில் இருந்த போது செய்யப்பட்ட ஆய்வுகள் ஆகும் இது. இதனால் இப்போது முடிவுகள் வேறு மாதிரி இருக்கலாம். ஓமிக்ரான் தொடர்பாக செய்யப்பட்ட இந்த இரண்டு ஆய்வுகள் இன்னும் மற்ற மருத்துவர்கள், வல்லுனர்கள் மூலம் ரிவ்யூ செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறலாம்

மாறலாம்

இதனால் இந்த ஆய்வில் இருப்பது போல இல்லாமல் வரும் நாட்களில் ஓமிக்ரான் வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கேஸ்கள் உயரும் வாய்ப்புகளும் உள்ளன. சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இதனால் இந்த ஆய்வை மிகவும் கவனமாக அணுக வேண்டும் என்று ஆய்வு நடத்திய மருத்துவர்களே குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கம்

விளக்கம்

முதல் ஆய்வை மேற்கொண்ட ஸ்காட்லாந்தின் மூத்த மருத்துவர் ஜிம் மெக்மேனாமின், இது நல்ல செய்திதான். அதே சமயம் இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடக்க்கட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வு. புள்ளி விவர ரீதியாக இது சரியானது. ஆனால் வரும் நாட்களில் இதில் மாற்றங்கள் ஏற்படாது என்று உறுதி அளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவல்… 27.57 கோடியை தாண்டிய பாசிட்டிவ் கேஸ்கள்!
    புதிர்

    புதிர்

    இதனால் ஓமிக்ரான் உண்மையில் டெல்டாவை விட ஆபத்தானதா இல்லையா என்பது கேள்வியாக இருக்கிறது. இந்த புதிருக்குத்தான் இன்னும் விடையே கிடைக்கவில்லை. இது டெல்டாவைவிட வேகமானது என்று உறுதியாகிவிட்டது. ஆனால் இதன் வீரியத்தன்மை குறித்த முழுமையான டேட்டா இன்னும் வெளியாகவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+