10 லட்சத்தை தொட்ட எண்ணிக்கை.. அமெரிக்காவில் மோசமாகும் நிலை.. கொரோனாவிற்கு 57,862 பேர் பலி!
அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக உலகம் முழுக்க 3,110,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 215,231 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 944,595 பேர் உலகம் முழுக்க குணமடைந்து உள்ளனர்.
உலகிலேயே கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு நாளுக்கு நாள் கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது.

அமெரிக்கா பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 1,022,259 பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 11,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மொத்தமாக 57,862 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,065 பேர் பலியாகி உள்ளனர்.

எத்தனை பேர் குணமடைந்தனர்
அமெரிக்காவில் மொத்தமாக 139,927 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது அமெரிக்காவில் 824,470 ஆக்டிவ் கேஸ்கள்கள் உள்ளது. 14,145 பேர் அங்கு மிகவும் மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள். அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் 300,334 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நியூயார்க்கில் 22,866 பேர் பலியாகி உள்ளனர்.

நியூயார்க் நிலை
நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நியூயார்க்கில் 243 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் கொரோனா வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அங்கு கொரோனா வேகம் குறைய தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் நியூயார்க்கில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.

நியூஜெர்சி நிலை
அமெரிக்காவில் நியூஜெர்சியில் 113,856 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரத்தில் 398 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 6,442 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதனால் இப்போதைக்கு கொரோனா வேகம் குறைய வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications