ஒரே நாளில் டபுள்.. அமெரிக்காவில் "ஆதிக்கம்" செலுத்தும் கொரோனாவானது ஓமிக்ரான்.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக உருவெடுத்தது ஓமிக்ரான் வேரியன்ட். அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும்.
Recommended Video
அமெரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் வரை இது வெறும் 3 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்தது. அங்கு 44 மாகாணங்களில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஓமிக்ரான் பாதிப்பு வீதம் அமெரிக்காவில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 830 ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அமெரிக்கா கொரோனா
ஆனால் அங்கு ஜீன் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 73 சதவிகிதம் மாதிரிகள் ஓமிக்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே உண்மையில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம் இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ மற்றும் நோய் கட்டுப்பாட்டு துறை விளக்கம் அளித்துள்ளது. அதிக ஜீன் சோதனை செய்தால் இன்னும் அதிக கேஸ்கள் கண்டறியப்படும்.

அமெரிக்கா ஓமிக்ரான்
நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 21,908 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இது புதிய ரெக்கார்ட் ஆகும். நியூயார்க்கில் மட்டும் 13 சதவிகித புதிய கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்களாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ மற்றும் நோய் கட்டுப்பாட்டு துறை விளக்கம் அளித்துள்ளது.

டெல்டா வகை
அமெரிக்காவில் இதற்கு முன் டெல்டா 87 சதவிகிதம் வரை புதிய கேஸ்களுக்கு காரணமாக இருந்தது. தற்போது கடந்த வார புள்ளி விவரத்தின்படி 27 சதவிகித கேஸ்கள் டெல்டா காரணமாக பதிவானது. இப்போது டெல்டாவை முந்தி அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தம் கொரோனாவாக ஓமிக்ரான் உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 126,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மொத்தம்
அமெரிக்காவில் மொத்தமாக 52,011,887 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 828,439 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,662,099 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,521,349 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications