12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன?

கொரோனா காரணமாக அமெரிக்காவில் மொத்தம் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளன

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கொரோனா காரணமாக அமெரிக்காவில் மொத்தம் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில்தான் பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Recommended Video

    அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்...எப்படி இருக்கிறது இப்போது?

    உலகம் முழுக்க 1,201,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 64,691 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா காரணமாக ஒரு நாளுக்கு சராசரியாக 5500 பேர் பலியாகி வருகிறார்கள். அதேபோல் ஒரு நாளுக்கு சராசரியாக 85 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

    முதல் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரவ ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. ஆனால் மீதம் உள்ள 3 மாதங்களுக்கு உள்ளாகவே 11 லட்சம் பேருக்கு வேகமாக கொரோனா பரவியது. உலகம் முழுக்க 12 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா நிலை

    கொரோனாவால் உலகிலேயே அமெரிக்காதான் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நாளுக்கு நாள் அதிக அளவில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கிறார்கள். நேற்று மட்டும் அங்கு 1048 பேர் கொரோனாவால் பலியானார்கள். 34,196 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவின் மிக மோசமான நாள் நேற்று என்று மருத்துவர்களை இதை தெரிவிக்கிறார்கள்.

    மொத்தமாக எவ்வளவு பேர்

    மொத்தமாக எவ்வளவு பேர்

    மொத்தமாக அமெரிக்காவில் 311,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கவில் 8,452 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் 126,168பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 11947 பேர் பலியாகி உள்ளனர்.ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது. இத்தாலி கொஞ்சம் இதில் வேகம் குறைந்துள்ளது. ஆனால் இன்னும் அங்கு நிலைமை மோசமாகவே உள்ளது.

    இத்தாலியின் நிலை என்ன

    இத்தாலியின் நிலை என்ன

    இத்தாலியில் 124,632 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15362 பேர் பலியாகி உள்ளனர்.ஜெர்மனியில் 96,092 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1444 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 89,953 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7560 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 55,743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3452 பேர் பலியாகி உள்ளனர ஆனால் கொரோனா உருவான சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசம் அடைந்துள்ளது.

    சீனாவில் கொரோனா

    சீனாவில் கொரோனா

    சீனாவில் 81,669 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3329 பேர் பலியாகி உள்ளனர். அங்கு நேற்று புதிதாக 30 நோயாளிகள் அனுமதியானார்கள். இதில் 28 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். புதிதாக 3 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.சீனாவில் கொஞ்சம் இயல்பு நிலை திரும்பி உள்ளது.யுனைட்டட் கிங்டமில் 41,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4313 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 23,934 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 501 பேர் பலியாகி உள்ளனர்.சுவிஸ் நாட்டில் 20,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 666 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+