அமெரிக்காவில் "சில" சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை.. நிறுவனங்களுக்கு செக்.. அதிபர் டிரம்ப் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் சில சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அமெரிக்காவில் 'சில' சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை.. நிறுவனங்களுக்கு செக்

    அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சண்டை தற்போது மொத்தமாக புதிய மோசமான நிலையை அடைந்துள்ளது. சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று டிரம்ப் கூறி உள்ளார்.

    உலக சுகாதார மையத்துடன் உறவை துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அதோடு சீனாவிற்கு எதிராகவும் அதிபர் டிரம்ப் இன்று கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

    சீனா பதில் சொல்ல வேண்டும்

    சீனா பதில் சொல்ல வேண்டும்

    அதிபர் டிரம்ப் தனது பேச்சில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து சீனா மறைத்து விட்டது. வுஹன் வைரஸின் பரவல் குறித்து சீனா மறைத்துவிட்டது இதனால் பல லட்சம் பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் இதனால் பலியாகி உள்ளனர். சீனா உலக நாடுகளுக்கு எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டது.

    வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    இதற்கெல்லாம் சீனா பதில் சொல்லியாக வேண்டும். நமக்கு வெளிப்படையான பதில்கள் வேண்டும். வுஹனில் இருக்கும் மக்கள் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் பெய்ஜிங் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வேறு சீன மாகாணங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களை வெளிநாடு செல்ல சீன அனுமதித்தது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு சீனா கொரோனாவை பரப்பியது.

    கொரோனாவை பரப்பியது

    கொரோனாவை பரப்பியது

    ஐரோப்பா, அமெரிக்காவிற்கு சீனா இப்படித்தான் கொரோனாவை பரப்பியது. பல வருடங்களாக அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சீனா உளவு வேலைகளை செய்து வந்தது. இதனால் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்புகள், மற்றும் ஆராய்ச்சிகளில் சில சீன மாணவர்கள், சீனர்கள் ஈடுபட தடை விதிக்கிறேன். அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கிறேன்.

    பாதுகாப்பு முக்கியம்

    பாதுகாப்பு முக்கியம்

    அமெரிக்காவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் . நாங்கள் சீனாவிடமும் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் குறித்து கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு சந்தையில் இருக்கும் சீனா நிறுவனங்களை கண்காணித்து வருகிறோம். அந்த நிறுவனங்கள் அமெரிக்க விதிக்கு எதிராக செயல்பட்டால் அந்த நிறுவனம் மீது தடை விதைக்கப்படும்.

    தடை

    தடை

    அந்த நிறுவனங்களை மொத்தமாக கண்காணிக்க முடிவு செய்து இருக்கிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது அமெரிக்க சீனா மீது தொடுத்து இருக்கும் அறிவுபூர்வமான வர்த்தக யுத்தம் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+