உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 26 லட்சத்தை தாண்டியது- பலி எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டுகிறது!
நியூயார்க்: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.
Recommended Video
உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனா தொற்று நோயால் பேரழிவை சந்தித்து வருகிறது. இன்றும் ஒரே நாளில் 921 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 830,797 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 46,239 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் இன்று ஒரே நாளில் 763 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் 1,33, 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,100.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக உயிரிழப்புகளை அதிகம் சந்தித்து வரும் நாடு இத்தாலி. இங்கு இன்றும் 437 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,085 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் கொரோனா மரணங்கள் ஏறத்தாழ சம அளவில் உள்ளன. பிரான்ஸில் இன்று 544 பேரும் ஸ்பெயினில் 435 பேரும் கொரோனா கொடூரத்துக்கு மாண்டு போனவர்கள். ஸ்பெயினில் 21,717 பேரும் பிரான்ஸில் 21,340 பேரும் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
ஈரானில் 5,391, ஜெர்மனியில் 5,211. துருக்கியில் 2,376 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,14,514. கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 1,82,457.












Click it and Unblock the Notifications