உலக அளவில் கொரோனாவால் 27.39 கோடி பேர் பாதிப்பு.. அமெரிக்காவில் 50,693,604 பேருக்கு பாதிப்பு
சீனா, அமெரிக்கா, பெரு நாடுகளில் தொற்று அதிகமாக பரவி கொண்டிருக்கிறது
நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.60 லட்சத்தை தாண்டியது. இதில் பல்வேறு நாடுகளில் தொற்று மறுபடியும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது..
இதனால் பெரும் மனித இழப்புகளும் ஏற்பட்டு விட்டன.. தொடர்ந்து பாதிப்புகளை தந்து வருகிறது... பல்வேறு நாடுகள் படுஜாக்கிரதையாக இருந்தும், மறுபடியும் தொற்று பாதிப்பில் சிக்கி உள்ளது கவலையை தந்து வருகிறது.

மொத்த பாதிப்பு
இது உலக நாடுகளுக்கு கவலையை தந்து வருகிறது.. அதே சீனாவில் மறுபடியும் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.. அதேபோல அமெரிக்கா முதலிடத்தில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பில் உள்ளது.. பிரான்ஸ் 7வது இடத்திலும், கொலம்பியா 13-வது இடத்திலும் உள்ளது.. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.39 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,360,105 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

கவனம்
கொரோனாவால் உலகம் முழுவதும் 273,941,707 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 245,816,531 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 22,765,071 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருந்தபோதிலும், மேலும் 20 ஆயிரம் கொரோனா கேஸ்கள் பதிவாகி இருப்பது கவலையை தந்து வருகிறது. மொத்த பாதிப்பு 11,190,354 ஆக அதிகரித்துள்ளது..

இங்கிலாந்து
தொற்றுக்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 048 ஆக உயர்ந்து வருகிறது.. அந்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 1,345,647 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்கள் 34,732,592 பேர் ஆகும்.. புதிதாக நேற்று ஒரே நாளில் 6,543 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதுவரை 476,897 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.. ஒரேநாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 34,162,765 நபர்கள் தொற்றில் இதுவரை குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளனர்..
Recommended Video

டிஸ்சார்ஜ்
அமெரிக்காவை பொறுத்தவரை 51,593,090 பேர், இதுவரை கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 153,747 கொரோனா கேஸ்கள் நேற்று ஒரே நாளில் மட்டும் பதிவாகி உள்ளது.. இதுவரை 826,368 பேர் இந்த கொரானாவுக்கு இறந்துள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 1,438 பேர் உயிரிழந்துள்ளனர்.. ரஷ்யாவை பொறுத்தவரை, 10,159,38 பேரை கொரோனா இதுவரை தாக்கி இருக்கிறது.. நேற்று 27,743 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன... துருக்கியில் 9,136,565 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டில் 22,209,020 நபர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications