மீண்டும் ஷாக் தரும் கொரோனா.. இங்கிலாந்து, பெரு நாடுகளில் உயரும் தொற்று.. தீவிர தடுப்பு நடவடிக்கை
சீனா, பெரு நாடுகளில் தொற்று அதிகமாக பரவி கொண்டிருக்கிறது
நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50.27 லட்சத்தை தாண்டியது. இதில் பல்வேறு நாடுகளில் தொற்று மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது..
இதனால் பெரும் மனித இழப்புகளும் ஏற்பட்டு விட்டன.. தொடர்ந்து பாதிப்புகளை தந்து வருகிறது... பல்வேறு நாடுகள் படுஜாக்கிரதையாக இருந்தும், மறுபடியும் தொற்று பாதிப்பில் சிக்கி உள்ளது கவலையை தந்து வருகிறது.

அமெரிக்கா
குறிப்பாக, அதே சீனாவில் மீண்டும் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.. அதேபோல அமெரிக்கா முதலிடத்தில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பில் உள்ளது.. கொலம்பியா 11-வது இடத்தில் உள்ளது.. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மொத்த உயிரிழப்பு 1.27 லட்சத்தை தாண்டியுள்ளது... இதுவரை 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,027,350 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 248,210,677 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 224,885,141 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 73,468 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்புகள்
இங்கிலாந்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருந்தாலும், இப்போது மேலும் 40 ஆயிரம் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. மொத்த பாதிப்பு 90,97,311 ஆக அதிகரித்துள்ளது... 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 672 ஆக உயர்ந்து வருகிறது.. அந்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,065 ஆக உள்ளது.
Recommended Video

இங்கிலாந்து
இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது... 79 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.. மற்றவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாகி உள்ளது... கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications