வேக்சின் போடாதவர்களுக்கு குறி.. உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் "டெல்டா".. அமெரிக்காவும் தப்பவில்லை!
நியூயார்க்: உலகம் முழுக்க டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது போலவே இந்த வைரஸ் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.
Recommended Video
இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைளிலேயே டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும், ஆபத்தும் கொண்டது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி! '
மற்ற ஆல்பா, காமா, பீட்டா வகை கொரோனாவை விட டெல்டா அதிகம் பரவ கூடியது. உலகம் முழுக்க ஆல்பா 170 நாடுகளிலும்., பீட்டா 119 நாடுகளிலும், காமா 71 நாடுகளிலும், டெல்டா 85 நாடுகளிலும் பரவி உள்ளது. டெல்டா 85 நாடுகளில் வேகமாக பரவி உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

எங்கு
உலகம் முழுக்க தற்போது பல்வேறு நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவி வருகிறது. ஈரான், ஈராக், ரஷ்யா, வங்கதேசம், தாய்லாந்து என்று பல்வேறு நாடுகளில் வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த நாடுகளில் புதிய அலை கொரோனா தாக்குதல் ஏற்பட டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் காரணம் என்று ஜீனோம் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனை
அதிகமாக 92.4% புதிய கேஸ்கள் இந்தோனேசியாவில் டெல்டா வகை கொரோனா மூலம் ஏற்பட்டுள்ளது. இந்த டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 வகை முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. தற்போது 85 நாடுகளுக்கு பரவி உள்ளது. முக்கியமாக இது ஆசிய நாடுகளை அதிகம் பாதிக்கிறது. வங்கதேசத்தில் சராசரி பாதிப்பு ஜூன் 4ல் இருந்த 9.9 ஆக இருந்து ஜூலை 14ல் 49% ஆக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாதிப்பு சதவிகிதம் 21ல் இருந்து 88 ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்து
தாய்லாந்தில் பாதிப்பு சதவிகிதம் 51ல் இருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் பாதிப்பு 1.7ல் இருந்து 32.15 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் டெல்டா பரவலால் 61ல் இருந்து பாதிப்பு 153% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மேற்கண்ட நாடுகளில் மரணங்களின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ரஷ்யாவில் 89%, வங்கதேசத்தில் 75.5%, மலேசியாவில் 85.7% புதிய கேஸ்கள் டெல்டா வகையோடு தொடர்பு கொண்டது.

டெல்டா
அமெரிக்காவிலும் புதிய கொரோனா கேஸ்கள் ஏற்பட டெல்டா பரவல் காரணம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் வேக்சின் பலருக்கும் போடப்பட்ட பின்பும் கூட டெல்டா வகை கொரோனா பரவல் அதிகம் உள்ளது. அமெரிக்காவில் ஏற்படும் புதிய கேஸ்களில் 25% டெல்டா வகை என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் டெல்டா வகை மிக வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுக்க டெல்டா வகை பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இந்தியாவிலும் இது மூன்றாம் அலையை ஏற்படுத்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா
முக்கியமாக ரஷ்யா, வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பெரிய அளவில் வேக்சின் போடாத நாடுகளிடம் இந்த டெல்டா வகை அதிகம் பரவுகிறது. இந்தியாவில் 6.45 கோடி மக்கள் மட்டுமே தற்போது வரை 2 டோஸ் வேக்சின் பெற்றுள்ளது. 35 கோடி மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் டெல்டா வகை பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications