அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி!
டெல்லி: கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால்தான் கொரோனா 2-வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்கிறது மத்திய அரசு.
Recommended Video
2 மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.12 லட்சமாக இருந்தது. இப்போது ஒருநாள் பாதிப்பு என்பது 40,000 என்கிற அளவில் உள்ளது.
அதேபோல் 2 மாதங்களுக்கு முன்னர் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 37.41 லட்சமாக இருந்தது. இது தற்போது 4.77 லட்சமாக குறைந்திருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வெகுவாகவும் குறைந்திருக்கிறது.

இன்னமும் பாதுகாப்பு இல்லை
ஆனால் நிதி ஆயோக் குழு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ஒட்டுமொத்த தேசமும் பாதுகாப்பாக இருக்கும் வரை நாம் பாதுகாப்பாக இல்லை என புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில் டாக்டர் வி.கே.பால் ஏன் இப்படி சொல்கிறார்?

அந்த 6 மாநிலங்கள்..
கேரளா, ஒடிஷா, சத்தீஸ்கர், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. மேலும் மொத்தம் 71 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த நிலையில்தான் இருக்கிறது.

டெல்டா பிளஸ்
இந்தியாவின் தற்போதைய சராசரி ஒருநாள் பாதிப்பு என்பது 13% ஆக குறைந்திருக்கிறது. ஜூன் 30-ந் தேதி புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56 பேராக இருந்தது. மேலோட்டமாக இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் 12 மாநிலங்களில் இந்த டெல்டா பிளஸ் புதிய வகை வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.

நடவடிக்கையில் மத்திய அரசு
இந்த காரணங்களால்தான் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வரவில்லை என்கிற மத்திய அரசு. தற்போது கொரோனா அதிக பாதிப்பு உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு குழுக்களை அனுப்பி இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி
அத்துடன் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் முன்னெடுப்பதும் முக்கியமான ஒன்றாக கருதுகிறது மத்திய அரசு. தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும் கூட கொரோனா தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications