பப்ஜியில் வருவது போல.. விதவிதமான வாகனங்களில் தாழ்வாக பறந்து வந்த ஹமாஸ் படை.. அரண்டு போன இஸ்ரேல்
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ள நிலையில் ஹமாஸ் படைகள் இஸ்ரேல் உள்ளே ஊடுருவியது எப்படி என்பது போன்ற சில காட்சிகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக இஸ்ரேல் உள்ளே வான் வழியாக ராக்கெட்டுகளை விடுவது என்பதோ அல்லது நிலபரப்பு வழியாக ஊடுருவது என்பதோ இயலாத காரியம். காரணம்.. இஸ்ரேலின் எல்லை பாதுகாப்பு அப்படி. ஹமாஸ் தாக்குதல்களில் இருந்து எல்லையைப் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது.
இரண்டு விதமான பாதுகாப்பை அந்த நாடு மேற்கொண்டு உள்ளது. ஒன்று இது காஸாவிற்குள் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவப்படும் எந்த ஆயுதங்களை தடுத்து தாக்கும் வகையில் ராக்கெட் தடுப்பு சாதனங்களை கட்டி உள்ளது. ராக்கெட் தாக்குதல்களை நிறுத்த, அமெரிக்காவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அயர்ன் டோமை இங்கே இஸ்ரேல் அதிக அளவில் களமிறக்கி உள்ளது . இன்னொரு பக்கம் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி எல்லையை கடக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளை தடுக்கவும் சுரங்க பாதைகளை கண்காணிக்கும் வகைகள் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் தாக்குதல்; இதை எல்லாம் மீறித்தான் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. சனிக்கிழமையன்று அந்த அமைப்புகள் எங்கு தோல்வியடைந்தன என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் நிச்சயமாக சோதனை செய்து பார்க்க வேண்டும். இதுவரை அயர்ன் டோம்.. இந்த ஏவுகணைகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஹமாஸ் 2,200 ராக்கெட்டுகளை வீசியதாக இஸ்ரேல் கூறியது, ஆனால் அவற்றில் எத்தனை இடைமறிக்கப்பட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. இதற்கு பின்பு வேறு ஒரு எளிமையான ஊடுருவல் முறை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி பாரசூட் வழியாக தாழ்வாக உள்ளே நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பப்ஜியில் வருவது போல ஹமாஸ் படைகள் தாழ்வாக பாராசூட் வழியாக உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இது போக தாக்குதலின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்குள் பாராகிளைடு மூலம் ஹமாஸ் உறுப்பினர்கள் உள்ளே நுழைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான படமும் வெளியாகி உள்ளது. அங்கே மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இவர்கள் பாராகிளைட் செய்து உள்ளே சென்றுள்ளனர்.
( போர் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா.. உள்ளே வந்த ஈரான், ஹெஸ்புல்லா.. 3ம் உலகப்போராகும் பாலஸ்தீன போர்)
இது தாழ்வாக பறக்கும் எந்திரம் ஆகும். இதன் மூலம் சத்தமின்றி பறந்து செல்ல முடியும். அதேபோல் இவை ரேடாரில் சிக்காது. மிக தாழ்வாக பறந்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியும். பப்ஜியில் வருவது போல ஹமாஸ் படைகள் தாழ்வாக பாராசூட் அல்லது பாராகிளைட் மூலமாக இப்படி பறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் அங்கே எல்லை பாதுகாப்பு அயர்ன் டோம் ஏன் அதன் வேலையைச் செய்யவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு பக்கம் அயர்ன் டோம் உள்ளிட்ட கருவிகள் வேலையை செய்யவில்லை.. இன்னொரு பக்கம் அவர்களின் உளவுத்துறையும் இப்படி ஒரு பெரிய தாக்குதலை கணிக்க முடியாமல் ஏமாந்து உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக.. உளவு ரீதியாக மிகப்பெரிய இஸ்ரேல் நாட்டை சிறிய அமைப்பான ஹமாஸ் ஏமாற்றி வெற்றி கண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications