போர் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா.. உள்ளே வந்த ஈரான், ஹெஸ்புல்லா.. 3ம் உலகப்போராகும் பாலஸ்தீன போர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு இடையில் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டு நாடுகளின் மோதலில் மற்ற சில நாடுகள் கலந்து கொண்டு இருப்பதால் இது உலகப்போராக உருவெடுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது.
இஸ்ரேல் எதிர்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக.. இஸ்ரேல் வரலாற்றில் அந்த நாடு எதிர்கொண்ட போர் அல்லாத பெரிய தாக்குதலாக இந்த ஹமாஸ் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பழி வாங்கியே தீருவோம். ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம்.

Will Israel Palestine conflict lead to World War 3 as USA and Iran pitches inside the fight?

காசா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது இந்த பிரம்மாண்ட தாக்குதலை நடத்திய ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் புகுந்து அங்கே கடுமையாக தாக்குதல் ஆப்ரேஷன்களை மேற்கொண்டு வருகிறது.

உலகப்போர்: இந்த மோதல் தற்போது உலகப்போராக உருவெடுக்குமோ என்ற அச்சமும் கூட எழுந்துள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹெஸ்புல்லா இயக்கம் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது

லெபனானில் ஆயுதப்படை குழுவாகவும், அரசியல் கட்சியாகவும் இந்த ஹெஸ்புல்லா இயங்கி வருகிறது. ஷியா பிரிவு இயக்கமான இது , அந்நாட்டு அரசுக்கு மிகவும் நெருக்கமானது. அதேபோல் ஈரான் போன்ற மற்ற ஷியா நாடுகளுக்கும் நெருக்கமாக இருக்கிறது. இந்த அமைப்புதான் சிரியாவில் அரசுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. அதேபோல் ஈரான் உடன் இணைந்து லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை தடுக்க போராடி வருகிறது.

சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Will Israel Palestine conflict lead to World War 3 as USA and Iran pitches inside the fight?

அமெரிக்கா போர் கப்பல்: இன்னொரு பக்கம் ஏற்கனவே அமெரிக்கா இங்கே போர் கப்பல்களை அனுப்ப உள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford தலைமையிலான குழு இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய விமான தாங்கி போர் கப்பல் ஆகும். அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன.

இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் vs பாலஸ்தீனம்,ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இதில் ரஷ்யா, சீனா இணையலாம். ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன.

அதனால் இந்த போரும் இணைந்து.. இரண்டு போர்களும் சேர்ந்து இது மூன்றாம் உலகபோராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+