நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன ராணுவத்தின் சீக்ரெட் ஆராய்ச்சி.. "ஹு" அதிகாரிகளையே உள்ளே விடாத வுஹான் மையம்.. வலுக்கும் சந்தேகம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவில் இருக்கும் வுஹான் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு சீனாவின் ராணுவத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இங்கு சீன ராணுவம் பல ரகசிய ஆராய்ச்சிகளை செய்வதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    Corona-வின் தொடக்கம் இதுவா? 9 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம்.. வலுக்கும் சந்தேகம்

    கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது தொடர்பான சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், இதன் தோற்றம் குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. அதிலும் கொரோனா வைரஸ் வுஹான் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் தோன்றி இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    சர்வதேச மீடியாக்களும், ஆராய்ச்சியாளர்களும் வுஹான் மையத்தில் இருந்துதான் கொரோனா வெளியேறியது என்று வலுவாக சந்தேகிக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து 90 நாட்களில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார் .

    மிருகங்களுக்கு கொரோனா வைரஸ்.. அடுத்து என்ன நடக்கும்? வுஹான் விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சித் தகவல்!மிருகங்களுக்கு கொரோனா வைரஸ்.. அடுத்து என்ன நடக்கும்? வுஹான் விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சித் தகவல்!

    என்ன

    என்ன

    அமெரிக்க அதிபர் பிடன் இதுவரை கொரோனா பரவல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில் திடீரென தற்போது கொரோனாவின் தோற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதிபர் பிடன் இப்படி விசாரிக்க சொல்கிறார் என்றால், கண்டிப்பாக அவருக்கு இது தொடர்பாக பெரிய அளவில் சந்தேங்கள் எழுந்து இருக்கும். அவர் திடீரென இப்படி விசாரணை நடத்த உத்தரவிட்டதற்கு சீனாவின் வுஹான் ஆராய்ச்சி மையம் மீது வைக்கப்பட்ட வேறு சில புகார்கள்தான் காரணம் என்கிறார்கள்.

     காரணம் இதுதான்

    காரணம் இதுதான்

    சீனாவின் வுஹான் ஆராய்ச்சி மையம் வைரஸ் குறித்தும் மருந்துகள் குறித்தும் ஒரு பக்கம் ஆராய்ச்சி நடத்தினாலும் இன்னொரு பக்கம் ராணுவ ரீதியான ஆராய்ச்சியும் நடக்கிறது. அதாவது சீனாவின் ராணுவம் இங்கு ஆராய்ச்சி செய்கிறது. ஒருவேளை பயோ ஆயுதங்கள், பயோ போருக்கான ஆராய்ச்சியாக இது இருக்கலாம் என்பதால் வுஹான் ஆராய்ச்சி மையம் மீது இப்போது கவனம் குவிந்து இருக்கிறது. இதுதான் அதிபர் பிடனின் திடீர் உத்தரவுக்கு காரணம் என்கிறார்கள்.

    முன்னாள் செயலாளர்

    முன்னாள் செயலாளர்

    அமெரிக்க அரசின் முன்னாள் செயலாளர் மைக் பாம்பியோ இது தொடர்பாக வைத்த புகாரில், வுஹான் ஆராய்ச்சி மையத்தில் கண்டிப்பாக ராணுவம் தலையிட்டுள்ளது. அங்கு ஒரு பக்கம் மருத்துவ ஆராய்ச்சி சென்றாலும், இன்னொரு பக்கம் பிஎல்ஏ ராணுவம் கண்டிப்பாக ஆராய்ச்சிகளை செய்து வருகிறது என்பதை நான் உறுதியாக கூறுவேன். உலக நாடுகளை சீனா ஏமாற்றுகிறது என்று கூறியுள்ளார்.

    அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

    அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

    இது தொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சிலரும், சர்வதேச ஊடகங்கள் சில வெளியிட்டுள்ள கட்டுரையிலும், வுஹான் ஆராய்ச்சி மையத்தில் பிஎல்ஏ ராணுவம் தனிப்பட்ட ஆய்வுகளை செய்து வருகிறது. வுஹான் ஆராய்ச்சி மையத்தில் உலக சுகாதார மையம் கடந்த வருடம் ஆய்வு செய்தது. ஆனால் அப்போது ராணுவம் ஆய்வு செய்து பகுதிகளுக்குள் வுஹான் ஆராய்ச்சி மையம் உலக சுகாதார மையம் அதிகாரிகளை அனுமதிக்கவில்லை.

    டாப் சீக்ரெட்

    டாப் சீக்ரெட்

    இது ராணுவ நடவடிக்கை என்று கூறி ஹு ஆராய்ச்சியாளர்களை சீனா உள்ளே அனுமதிக்கவில்லை. சீனா இங்கு செய்யும் டாப் சீக்ரெட் ஆராய்ச்சிதான் கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் மருத்துவ இயக்குனர்களில் ஒருவரான நிகோலாய் பெட்ரோவெஸ்கி இதே சந்தேகத்தை எழுப்பி உள்ளார். உலக நாடுகளை சீனா டிரிக் செய்து ஏமாற்றிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஏமாற்றியது

    ஏமாற்றியது

    இந்த வைரஸின் பிங்கர் பிரிண்ட் இயற்கையில் உருவானது போல இல்லை. கண்டிப்பாக இது ராணுவ ரீதியான ஆய்வு. ராணுவம் இதை பயோ ஆயுதம் போல உருவாக்கி இருக்கலாம். அதனால்தான் உலக சுகாதார மைய அதிகாரிகளை கூட வுஹான் ஆராய்ச்சி மையம் உள்ள சில கூடங்களுக்குள் அனுமதிக்கவில்லை. இதை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சந்தேகம் வலுக்கிறது

    சந்தேகம் வலுக்கிறது

    அமெரிக்க அதிபர் பிடன் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய தொடங்கியதில் இருந்தே, இந்த வைரஸின் தோற்றம் குறித்த கேள்விகள், சந்தேங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்போது இதில் சீன ராணுவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால் சந்தேகங்கள் வலுக்க தொடங்கி உள்ளது.

    English summary
    Did Wuhan Lab link to the Chinese military? : Doubts increase after Biden order to investigate the origin of the virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X