ஜோ பைடன் vs டொனால்ட் டிரம்ப்! அனல் பறந்த அதிபர் தேர்தல் விவாதம்.. அமெரிக்க தேர்தலில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள டொனால்ட் டிரம்பும் நேரடி விவாதத்தில் பங்கெடுத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் ஒருபகுதியாக தற்போதைய அதிபரும், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவரும் நேரடி விவாதங்களில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாதங்கள் பல கட்டங்களாக நடைபெறும். மட்டுமல்லாது அதிபர் தேர்தலில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவாதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

USA Donald Trump Joe Biden

இப்படி இருக்கையில் நேற்றிரவு விவாதம் தொடங்கியுள்ளது. விவாதத்தில் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பும் பங்கெடுத்துள்ளனர். இதனை சிஎன்என் தொலைக்காட்சி நேரடியாக தொகுத்து வழங்கியது. விவாதத்தில் பங்கெடுத்த இருவருக்கும் சிறப்பு மைக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஜோ பைடனுக்கு 81 வயதாகிறது. சில நேரங்களில் அவர் தன்னுர்வு இல்லாமல் மெய் மறந்து நின்றுவிடுகிறார்.

அதேபோல, டிரம்புக்கும் 78 வயதாகிறது. எனவே பல நேரங்களில் இவர் உளறிக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில், இந்த மைக்குகள் தேவையற்ற உளறலின்போது தானாக ஆஃப் ஆகிவிடும். மட்டுமல்லாது ஒருவர் பேசும்போது எதிர் தரப்பில் உள்ளவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். இப்படியாக இந்த விவாதம் தொடங்கியது.

வழக்கமாக விவாதத்தில் பங்கெடுப்பவர்கள் கைகுலுக்கிக்கொள்வது இயல்பானது. ஆனால், இந்த விவாதத்தில் இருவரும் கைகுலுக்கவில்லை. முதலில் வாதங்களை டிரம்ப்தான் தொடங்கினார். "பைடன் ஒரு மோசமான காரியத்தை செய்திருக்கிறார். அதுதான் பணவீக்கம். வளர்ந்து வரும் பணவீக்கம் நம்மை கொன்றுக்கொண்டிருக்கிறது" என்று ஆவேசமாக பேசினார். அதேபோல ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையும் பைடன் கடுமையாக எதிர்த்தார்.

"நாம் அப்படி செய்திருக்கக்கூடாது. இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் சங்கடமான நாள்" என்று கூறியுள்ளார். இதற்கு பதிலடியாக கருக்கலைப்பு விஷயத்தை ஜோ பிடன் கையில் எடுத்திருந்தார். "கருக்கலைப்பு அணுகலைத் தடுப்பதில் டொனால்ட் டிரம்பின் பங்கு அதிகம்" என்று பைடன் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், "கருக்கலைப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேன். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்த விநியோகங்களை தடுக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். இப்படியா இந்த விவாதங்கள் நீண்டிருக்கின்றன.

இது தவிர பொருளாதார பாதிப்பு, வெளியுறவுக் கொள்கைகள், சீன விவகாரம், சர்வதேச நெருக்கடி, வளர்ந்து வரும் இடதுசாரி கொள்கைகள், உக்ரைன் போர், இஸ்ரேலுக்கான ஆதரவு, திபெத் விவகாரம், தைவான் பிரச்னை, வடகொரியா மற்றும் ரஷ்ய விவகாரம் போன்றவை விவாதங்களாக எழ இருக்கிறது. இதில் பைடன் என்ன பேசுகிறார், டிரம்ப் என்ன கேள்வி கேட்கிறார் என்பது முக்கியமானதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+