கொஞ்சி கொஞ்சி பேசியபடி..கிட்ட கிட்ட வந்தாராம்.. சாய்ந்த கணவன்.. கடைசியில பார்த்தால்? "வேட்டு" வோட்கா
நியூயார்க்: வாழ்க்கையில் சின்ன சின்ன கஷ்டங்கள் வந்தாலும், அதை எப்படி முறியடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை சொல்கிறார் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் டார்டன்.. ஆனால், இவர் இப்போது ஜெயிலில் உள்ளார்.. என்ன காரணம்?
அமெரிக்காவில் உள்ளது பார்க் சிட்டி.. இது ஒரு மலைப்பிரதேசம் ஆகும்.. இங்கு உடா என்ற இடத்தில் வசித்து வரும் பெண்மணி கவுரி டார்டன் ரிசின்ஸ்.. இவரது கணவர் பெயர் எரிக் ரிசின்ஸ்.
மலைப்பிரதேசம்: 2 பேருமே இந்த மலைப்பிரதேச நகரத்தில் ஒன்றாக வசித்துவந்தனர்.. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆனாலும், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துபோகும்.. நிறைய சண்டைகளும் ஏற்படும்.. கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி மோதல்கள் வருவது இயல்பாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2022, மார்ச் 4ம் தேதி கணவன் இறந்துவிட்டார்.. எனவே, 3 குழந்தைகளுடன் மனைவி டார்டன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.. டார்டன் மிகவும் புத்திசாலியாம்.. நிறைய படித்தவர்.. எழுத்து திறமை அதிகம் உள்ளனர். சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
நிம்மதியில்லை: இதில் ஒரு புத்தகம் அமோகமாக விற்பனையாகி உள்ளது.. மனதிற்கு பிடித்த மனிதர்களை இழந்த பிறகும்கூட, நம்பிக்கையை இழந்துவிடாமல், வாழ்வது எப்படி? என்ற புத்தகம்தான் அது.. உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் புத்தகம் அது.. வாழ்க்கையில் சின்ன சின்ன கஷ்டங்களை எப்படி சமாளித்து, மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை பற்றி டார்டன் அதில் விரிவாகவே எழுதியிருக்கிறாராம். அதனால்தான், அந்த புத்தகம் அதிகமாக பேசப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் திடீரென டார்டனை போலீசார் கைது செய்துவிட்டனர்.. காரணம் என்ன தெரியுமா? தன் கணவனை போட்டு தள்ளியதே இந்த டார்டன் தானாம்.. அதாவது, தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துபோன நிலையில், ஒருகட்டத்தில் டார்டன் கடுப்பாகிவிட்டாராம். அப்படித்தான், 2022 பிப்ரவரி மாதத்திலும் இவர்களுக்குள் சண்டை முற்றியுள்ளது.. அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளான டார்டன், கணவனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
காதல் ரசம்: எனினும், அதை கணவனிடம் காட்டிக் கொள்ளவில்லை.. ஆனால், வழக்கத்துக்கும் மாறாக, கணவனிடம் கொஞ்சி கொஞ்சி பேசினார்.. நெருங்கி பழகினார்.. காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டே இருந்தார்.. 2 பேரும் ஒன்றாக சேர்ந்து வோட்கா சாப்பிட்டுள்ளனர்.. தினமும் வோட்காவை கணவனுக்கு தந்தார் டார்டன்.. ஆனால், தினமும் குடிப்பதால் சலிப்பான கணவன், ஒருகட்டத்தில் வோட்கா வேண்டாம் என்று சொன்னார்.. ஆனாலும் டார்டன் விடலையே.. கட்டாயப்படுத்தி வோட்காவை குடிக்க தந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான், கடந்த 2022ம் வருடம் மார்ச் 4ம் தேதி, கணவன் சுயநினைவின்றி, மூச்சு பேச்சில்லாமல் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு டார்டன் தகவல் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து, டார்டனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.. இதற்கு பிறகுதான், டார்டனுக்கே தெரியாமல் போலீசார் இந்த மரணம் குறித்து விசாரணையை துவங்கினர்.. ஆனால் டார்டானோ, புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டார்.-

இப்போது போலீசார் விசாரணை முடிந்துள்ளது.. அதில், வோட்காவில் விஷ மாத்திரைகளை டார்டன் கலந்து தந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஸ்லோ பாய்சன்.. இந்த விஷ மாத்திரைகள் உடனடியாக உயிர்எடுப்பதற்கு பதிலாக, மெல்ல மெல்ல உயிரை கொன்றுள்ளது.. வோட்காவில் தினமும் விஷ மாத்திரைகளை டார்டன் கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது..
கம்பி எண்ணும் எழுத்தாளர்: அதுமட்டுமல்ல, கணவன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே, தன்னுடைய நண்பர்களை எல்லாம் அழைத்து பார்ட்டி தந்துள்ளார் டார்டன்.. இதெல்லாம் போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்து கொண்டு, புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டார் டார்டன்.. அந்த புகழ் போதையிலும் மயங்கி விழுந்து கிடந்த நேரம்தான், போலீசார் சைலண்ட்டாக தங்கள் விசாரணையை நடத்தி, டார்டனையும் கைது செய்துள்ளனர்.. இப்போது டார்டன் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்...!!
-
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications