அமெரிக்காவில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அந்த கனவை மறந்துடுங்க.. டிரம்ப் வைத்த மிகப்பெரிய ஆப்பு!
சென்னை: வெளிநாட்டு மக்களை விட உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலை கொடுப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கட்டாயமாக்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் பிறந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு செக் வைக்கும் விதாமாக குறைந்த பட்ச ஊதியத்தை அவர்களுக்கு விதிக்க உள்ளனர். அதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தில் ஒரு பதவி காலியாக உள்ளது. இதில் அமெரிக்கர்களை தேர்வு செய்தால் என்ன வருமானம் வேண்டுமானாலும் தரலாம். எந்த பிரச்சனையும் இல்லை.
அதாவது உதாரணமாக மாதம் 5 ஆயிரம் டாலர் என்று பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஆனால் அதுவே H-1B விசா வைத்திருக்கும் இந்தியர் ஒருவரை எடுக்க வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கட்டாயமாக தர வேண்டும். இங்கே பேச்சுக்கு குறைந்தபட்சம் ஊதியம் 6 ஆயிரம் டாலர் என்றால்.. அந்த நிறுவனம் யாரை தேர்வு செய்யும்? அமெரிக்கரைத்தானே?

அதுதான் அமெரிக்க அரசு போடும் திட்டம். குறைந்த ஊதியத்திற்கு வருகிறார்கள் என்பதால் இந்தியர்கள் பலர் அங்கே வேலைக்கு எடுக்கப்பட்ட நிலையில்.. அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கட்டாயமாக்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நேரடியாக இந்தியர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறு.
அமெரிக்கா திட்டம்
இதனால் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். அதாவது அங்கே உள்ளூர் மக்களுக்கே வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சராசரி உள்ளூர் ஊதியம் எனப்படும் தரநிலையை கட்டாயமாக்குவதன் மூலம்.., H-1B விசா உள்ளவர்களுக்கு சந்தை ஊதியத்தை விட அமெரிக்க நிறுவனங்கள் மிக அதிகமாக செலுத்த வேண்டும் என்று கட்டாயம் ஏற்படும். இதனால் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், H-1B விசா உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு $80,000 செலுத்த வேண்டும். அதாவது தற்போது சராசரியாக 60 ஆயிரம் டாலர் வருடம் செலுத்தப்படுகிறது. இதை 80 ஆயிரம் டாலராக.. அதுவும் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கே எடுக்காமல் போகும் அபாயம் உள்ளது.
விசா பிரச்சனை
ஏற்கனவே அமெரிக்காவில் H1-B visa மூலம் தங்கி இருக்கும் இந்தியர்களின் வாரிசுகள் பலர் விசா பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அமெரிக்காவிற்கு H1-B visa பெற்று குடியேறிய பலரின் குழந்தைகள் 21 வயதை கடந்த பின் விசா பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் இத்தனை காலம் பெற்றோர்களின் dependents ஆக இருந்தனர். அதாவது சார்பு விசாவில் இருந்தனர்.
தற்போது உள்ள அமெரிக்க விசா விதிப்படி.. 21 வயதாகும் நிலையில் அந்த வாரிசு 2 வருடங்களுக்குள் விசா பெற வேண்டும். ஆனால் அங்கே கொண்டுவரப்பட்ட சில விதிகள் மற்றும் வழக்குகள் காரணமாக இந்த 2 வருட கால அவகாசம் நீக்கப்படலாம் என்கிறார்கள்.
அதாவது 2 வருடத்தில் விசா பெற வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 21 வயதான உடன் இவர்கள் விசா பெற வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது சுயமாக இவர்கள் வெளியேற வேண்டிய அபாயம் உள்ளது.
தற்போது உள்ள டேட்டாபடி 1.34 கோடி இந்திய குழந்தைகள் விசா பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்கள் 21 வயதை அடையும் நிலையில் உள்ளனர். இதனால் 21 வயதான உடன் இவர்கள் விசா பெற வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications