சரமாரியாக ஏவுகணைகளை ஏவிய ஈரான்.. Situation அறைக்கு வேகமாக ஓடிய டிரம்ப்.. என்ன நடக்குது?
நியூயார்க்: ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள situation அறையில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். அமெரிக்க ராணுவத்தின் கூட்டுத் தளபதிகள் தலைவர் ஜெனரல் ரசின் கெய்ன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோருடன் நிலைமையைக் கண்காணித்து வருகிறார்.
ஈரானின் தாக்குதல்
ஈரான் "ஆபரேஷன் பஷாரத் அல்-ஃபத்" என்ற பெயரில் கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உடேத் விமானத் தளம் மீது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம் மீது மற்றொரு ஏவுகணையையும் ஏவியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
கத்தாரின் எதிர்வினை
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.. அது பற்றி விரைவில் முடிவு எடுப்போம் என்று கத்தார் கூறி உள்ளது. மேலும் கத்தார் நாடு தனது வான்வெளியை மூடியுள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய மோதலாக மாறக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.
ராணுவ நடவடிக்கை
பாரசீக வளைகுடா முழுவதும் ராணுவ நடவடிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு போர் விமானங்கள் பிராந்தியம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்திலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் புறப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் பதில் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதைத்தான் ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள situation அறையில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்.
வரும் நாட்ஜ்களில் நேட்டோவின் போராக மாறும். ஏனென்றால் அமெரிக்கா குண்டு போட்டால் அதற்கு ஈரான் பதிலடி தரும். இதனால் நிலைமை மோசமாகி நேட்டோ போரில் தலையிடும். இதற்கு பதிலடி ரஷ்யா கண்டிப்பாக போரில் குதிக்கும். ஈரான், ரஷ்யாவிற்கு துணையாக பல இஸ்லாமிய நாடுகள் களமிறங்கும். ஏன் சீனாவும் கூட களமிறங்கி தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. டிரம்ப் செய்த இந்த தவறு.. 3ம் உலகப்போருக்கு வித்திடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல், இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர், உக்ரைன் - ரஷ்யா போர், வட கொரியா - தென் கொரியா போர் போன்ற நிகழ்வுகள் உலகப் போர் அபாயத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அமெரிக்க பில்லியனரும், ஹெட்ஜ் நிதி வழிகாட்டியுமான ரே டாலியோ, முழு அளவிலான உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35% ஆக இருந்தது, தற்போது 50% ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன்படியே தற்போது மோதல்களும் தீவிரம் அடைந்து வருகின்றன.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications