அதிபராக பதவியேற்ற அடுத்த நொடியே! அமெரிக்க குடியுரிமையில் கை வைக்கும் டிரம்ப்.. இந்தியர்களுக்கு செக்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளார். இதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்க உள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்று அவர் முக்கியமான இரண்டு உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் பிறப்பிக்க உள்ள 200 உத்தரவுகளில் 2 முக்கியமான உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்படும்.

சட்டவிரோத அகதிகள்:
நாடு முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு முதல் நாளே வரும். முதல் நாளே இதற்கான கையெழுத்தை டிரம்ப் போட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வர கூட தயார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை மாற்றம்:
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள்.
இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.
நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றியை அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.
நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.
அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்து உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications