சற்று நேரத்தில்.. டிரம்ப் கைக்கு போகும் அணு ஆயுத பவர்.. அது என்ன நியூக்ளியர் புட்பால், பிஸ்கட்?
நியூயார்க்: அமெரிக்க நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ள டிரம்ப் இன்னும் சற்று நேரத்தில் அந்த நாட்டின் அணு ஆயுத பவரை பெற உள்ளார். சற்று நேரத்தில் அவரிடம் அணு ஆயுத புட்பால்" மற்றும் "பிஸ்கட்" வழங்கப்படும்.
அமெரிக்காவில் அணு ஆயுத தாக்குதலை நடத்த அதிபர்தான் உத்தரவிட முடியும். அதாவது ஒரு நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அமெரிக்க அதிபர் உத்தரவிட முடியும். இதற்காக அதிபருடன் இருக்கும் இரண்டு விஷயங்கள்தான் "புட்பால்" மற்றும் "பிஸ்கட்".

கடந்த முறை டிரம்ப் ஆட்சி முடிந்த பிடன் ஆட்சி வந்த போது டிரம்ப் இந்த அணு ஆயுத புட்பால், பிஸ்கட் இரண்டையும் கையேடு ஹெலிகாப்டரில் எடுத்துக்கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அணு ஆயுத புட்பால், பிஸ்கட் deactivate செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு அணு ஆயுத புட்பால், பிஸ்கட்
பிடனிடம் தரப்பட்டது. இந்த முறை மீண்டும் அணு ஆயுத புட்பால், பிஸ்கட் டிரம்ப் கைகளில் தரப்பட உள்ளன.
அணு ஆயுத புட்பால் என்றால் என்ன?:
அணு ஆயுத புட்பால் என்பது அமெரிக்க அதிபரிடம் இருக்கும் ஒரு கருப்பு நிற பெரிய சூட்கேஸ் ஆகும். இதை அதிபருடன் எப்போதும் இருக்கும் ஒரு ராணுவ உயர் அதிபர் வைத்து இருப்பார். 20 கிலோ எடை கொண்ட இந்த சூட்கேஸ் மூலம் அணு ஆயுத தாக்குதலை எங்கிருந்து வேண்டுமானாலும் நடத்த உத்தரவிட முடியும். ஆனால் இதில் தாக்குதலை நடத்துவதற்கான சிவப்பு நிற பொத்தான் எல்லாம் இருக்காது. இந்த புட்பால் செயல்படும் விதம் கொஞ்சம் விசித்திரமானது.
ஒரு நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த விரும்பினால் இந்த புட்பாலை திறந்து அமெரிக்க அதிபர் அணு ஆயுத தாக்குதல் நடத்த உத்தரவிடலாம். இந்த உத்தரவு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். ராணுவ கட்டுப்பாட்டு அறையில் இந்த உத்தரவை சோதனை செய்துவிட்டு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும். இந்த உத்தரவு புட்பாலில் இருந்து ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு எப்படி செல்லும் என்பது மட்டும் ராணுவ ரகசியம். அதேபோல் இந்த உத்தரவு எப்படி கொடுக்கப்படும் என்பது குறித்தும் நிறைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த புட்பால் மூலம் அதிபர் அணு ஆயுத தாக்குதலை உத்தரவிட வேண்டும் என்றால் அதற்கு அவர் ஒரு பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டும். இந்த பாஸ்வேர்ட் அதிபர் பிடனிடம் தற்போது உள்ளது. கிரெடிட் கார்ட் போன்ற கண்ணாடி அட்டையில் இந்த பாஸ்வேர்ட் இருக்கும். இந்த கண்ணாடியை உடைத்தால் உள்ளே பாஸ்வேர்ட் இருக்கும். இந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் அதிபர் உத்தரவை உறுதி செய்து ராணுவ கட்டுப்பாட்டு மையம் அணு ஆயுத தாக்குதலை நடத்தும்.
அணு ஆயுத பிஸ்கட்:
இந்த பாஸ்வேர்ட் அடங்கிய அட்டைக்கு பெயர்தான் பிஸ்கட். இந்த பிஸ்கட்டும் - புட்பாலும்தான் அமெரிக்க பாதுகாப்பை உறுதி செய்யும். ஒரு அதிபர் விபத்தில் இறந்துவிடுகிறார் என்றால் உடனே அவரின் பிஸ்கட் பாஸ்வேர்ட் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டு துணை அதிபரின் பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும். இருவரும் ஒன்றாக விபத்தில் இறந்தால் காங்கிரஸ் அவையின் ஸ்பீக்கரின் பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.
ஆனால் இவர்கள் மூவரும் இறந்து போனாலும் கூட அமெரிக்காவில் இருக்கும் "டேசிக்னேடட் சர்வைவர்" எனப்படும் அதிபர் பொறுப்பை ஏற்க தகுதியான அடுத்த கட்ட உயர் அதிகாரியிடம் (பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள்) இந்த பிஸ்கட் மற்றும் புட்பால் கொடுக்கப்படும். ஆகவே ஒரே நேரத்தில் 3-4 புட்பால் எப்போதும் தயாராக இருக்கும்.
பொதுவாக ஒரு அதிபரின் ஆட்சி முடிந்து புதிய அதிபர் பதவி ஏற்கும் போது பழைய அதிபர் கண் முன்னே புதிய அதிபரிடம் இந்த புட்பால் கொடுக்கப்படும். அதேபோல் புதிய அதிபரிடம் பிஸ்கட் கொடுக்கப்பட்டு அதில் புதிய பாஸ்வேர்ட் கொடுக்கப்படும். பதவி ஏற்பு விழாவின் ஒரு பகுதியாக இது நடக்கும்.
முன்னதாக முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி சுடப்பட்ட போது இந்த பிஸ்கட் பாஸ்வேர்ட் காணாமல் போனது. அதேபோல் பில் கிளிண்டன் தனது பாஸ்வேர்ட் பிஸ்கெட்டை பல மாதங்களாக தொலைத்துவிட்டு தேடியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications