டிவிட்டரின் முக்கிய பொறுப்பிலிருந்து கழன்ற எலான் மஸ்க்! புதிய தலைமை அறிவிப்பு.. ஆனால் ஒரு டிவிஸ்ட்
நியூயார்க்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ட்விட்டரை வாய்கிய பின்னர் எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்த வருகிறார். இந்நிலையில் டிவிட்டரின் சிஇஓ பொறுப்பிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாகவும் புதிய சிஇஓ-வை நியமித்துள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். ஆனால் அது யார் என்று கூறாமல் ட்விஸ்ட் வைத்துள்ளார்.
உலக பணக்காரர்கள் வரிசையில் முதலில் உள்ள எலான் மஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். அப்போதுதான் தொடங்கியது பஞ்சாயத்து. அவர் கூறியதை போல பின்னாட்களில் டிவிட்டரை வாங்க பெரியதாக முனைப்பு காட்டவில்லை. இதனையடுத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வாங்கும் யோசனை இல்லை என்று கூறிவிட்டார். இது டிவிட்டரின் பங்குகளை பெரிதும் பாதித்தது. இதனையடுத்து டிவிட்டர் தரப்பு நீதிமன்றம் சென்றது.

இந்த பஞ்சாயத்துகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை மஸ்க் வாங்கினார். அவர் கைக்கு டிவிட்டர் சென்றவுடன் அவர் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை பழைய தலைமைகளை மாற்றியதுதான். உடடினாயாக தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் இதர உயர் அதிகாரிகளை பணியிலிருந்து விடுவித்தார். பின்னர் இவரே சிஇஓ-வாக பணியாற்ற தொடங்கினார். இது தவிர டிவிட்டரின் கடைநிலை ஊழியர்களின் பாதி பேரை வேலையை விட்டு துரத்தினார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் டிவிட்டரிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று இவர் கூறியிருந்ததுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் டிவிட்டர்தான் அரசியல் களத்தின் ரத்த பூமி. இப்படி இருக்கும்போது அதில் மாற்றம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு எக்குத்தப்பாக எதையாவது இவர் செய்து வைத்துவிட போகிறார் என்கிற கவலை ஏற்த்தாழ அனைத்து டிவிட்டர் பயனாளர்களுக்கும் இருந்தது.

ஆனால் அவர் சில சிறிய மாற்றங்களைதான் மேற்கொண்டார். அதாவது டிவிட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு பணம் வசூலிப்பது. அதேபோல சம்பல் மற்றும் கோல்டன் நிற 'டிக்களை' அறிமுகப்படுத்துவது. அதாவது சாம்பல் நிற 'டிக்' அரசு சார்புடைய பேஜ்களுக்கு வழங்கப்படும். இதே கோல்டன் டிக், மீடியா பேஜ்களுக்கு வழங்கப்படும். எல்லாம் சரிதான் ஆனால் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் நிர்ணயித்திருப்பது பெரும் விமர்சனங்களை உருவாக்கியது.
மட்டுமல்லாது கட்டணம் செலுத்தாதவரின் கணக்குகளிலிருந்து ப்ளூ டிக் அகற்றப்பட்டது. இப்படியா தமிழ்நாட்டின் பல்வேறு பிரபலங்களின் ப்ளூ டிக் அகற்றப்பட்டது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம், மஸ்க் டிவிட்டருக்கு புதிய சிஇஓவை அறிவித்திருப்பதாக ட்விட் செய்துள்ளார். இவர் 6 வாரத்தில் தனது பணியை தொடங்குவார் என்றும் கூறியுள்ளார். ஆனால் யார் அவர்? என்கிற பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் இது NBCUniversal-ன் உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மைகளின் தலைவரான லிண்டா யாக்காரினோவாகதான் இருக்க வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications