நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ச்ச்சீ பிளைட்டில் இப்படியா? எலான் மஸ்க் மீது பெண் பரபர புகார்.. பல கோடி தந்து "மறைத்த" ஸ்பேஸ் எக்ஸ்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: எலான் மஸ்க்கிற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த புகாரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து சமாளித்ததாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ஆனால் இந்த டீலிங் இன்னும் முடியவில்லை.

4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்

இப்போதைக்கு இதய "ஹோல்டில்" வைப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதில் பல பொய்யான யூசர்கள் இருக்கிறார்கள்.. 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பொய்யான யூசர்கள் இருக்கிறார்கள். இதை பற்றிய உண்மை வெளியே வர வேண்டும் என்று மஸ்க் கூறியுள்ளார்.

யூசர்கள்

யூசர்கள்

எத்தனை பொய்யான யூசர்கள் உள்ளனர் என்று தெரிந்த பின்பே அதை பற்றி முடிவு எடுப்பேன். அதுவரை ட்விட்டரை வாங்குவதை ஹோல்டில் வைக்க போகிறேன் என்று மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் எலான் மஸ்க்கிற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த புகாரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து சமாளித்ததாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது. இன்சைடர் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி 2016ல் இந்த சமபவம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் நடந்துள்ளது. மஸ்க் பயன்படுத்திய தனி விமானம் கலிபோர்னியாவில் இருந்து கிளம்பி இருக்கிறது. இந்த விமானத்தில் பெண் ஒருவரிடம் எலான் மஸ்க் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கொடுத்த புகாரின் படி.. எலான் மஸ்க் அந்த பெண்ணை தனியாக அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு முன் தன்னுடைய உடைகளை கழற்றி இருக்கிறார்.

பெண் புகார்

பெண் புகார்

இந்த நிலையில் அந்த பெண் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் இதை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் தோழி ஒருவர் இந்த சமபவம் உண்மை என்றும் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில்தான் பல கட்ட வாதங்களுக்கு பிறகு 2018ல் அந்த பெண்ணுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடி கொடுத்து செட்டில் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

வெளியே பேச கூடாது

வெளியே பேச கூடாது

இதை பற்றி வெளியே பேச கூடாது என்று கூறி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சில ஆவணங்களை கைப்பற்றி, இந்த சம்பவம் நடந்ததை இன்சைடர் ஊடகம் உறுதி செய்துள்ளார். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலான் மஸ்க் ஆகியோர் இதற்கு மறுப்போ, விளக்கமோ இது வரை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்டல்

கிண்டல்

ஆனால் எலான் மஸ்க் இதை பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். என்னை பற்றி ஏதாவது புகார் எதிர்காலத்தில் வந்தால் அதை எலான் கேட் என்று அழையுங்கள் என்று கூறி இருந்த பழைய போஸ்டை ஷேர் செய்து.. இப்போது எலான் கேட் ஸ்கேண்டல் வந்துவிட்டது என்று கூலாக பதில் அளித்தியுள்ளார். அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க தீவிரமாக முயன்று வரும் நிலையில்தான் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Elon Musk Gate: Why did Space X pay a woman Rs. 2 crore settlement? எலான் மஸ்க்கிற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த புகாரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து சமாளித்ததாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X