ஆளே மாறிட்டாரே.. உச்சு கொட்டும் நேரத்தில் "வெயிட்" குறைந்த எலான் மஸ்க்.. ஓ.. இதுதான் காரணமா?
நியூயார்க்: டிவிட்டர் ப்ளூ டிக் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த எலான் மஸ்க் தற்போது எடை குறைப்பு விவகாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களில் அவர் 13 கி.கி வரை தனது உடல் எடையை குறைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதற்கு தான் கையாண்ட வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
தற்போது இந்த ட்வீட் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக தனது மகன் கண்டதையும் தின்கிறார் என எலான் மஸ்க்கின் தந்தை 'எரோல் மஸ்க்' கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் எலான் மஸ்க் தனது எடை குறைப்பு குறித்து கூறியுள்ளார்.

உடல் பருமன்
உலகம் முழுவதும் உடல் பருமன் என்பது மனிதர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. இது பல்வேறு நோய்களுக்கு அடித்தளமிட்டும் வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கூட இந்த பரும் பிரச்னையிலிருந்து தப்பவில்லை. ஆனால், தற்போது இந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்துவிட்டதாக மஸ்க் கூறியுள்ளார். அதாவது குறிப்பிட்ட சில நாட்களிலேயே 13 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மஸ்க், இதற்கு தான் கையாண்ட வழிமுறைகளையும் கூறியுள்ளார்.

எடை குறைப்பு
டிவிட்டர் பயனாளர் ஒருவர் எலான் மஸ்கின் பழைய படம் ஒன்றையும், சமீபத்திய படம் ஒன்றையும் பகிர்ந்து "நீங்கள் ஒரு டன் எடையை குறைத்துவிட்டீர்கள் மஸ்க். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்" என்று கூறியிருந்தார். இந்த டிவிட்டுக்கு பதிலளித்த மஸ்க், "இது வெறும் 13 கிலோதான்" என்று கூறியிருந்தார். பலரும் இது எப்படி சாத்தியமானது என்று எலானிடம் கேள்வியெழுப்பினர். தான் மூன்று வழிமுறைகளை பின்பற்றியதாகவும், எனவேதான் இவ்வாறு என்னால் எடையை குறைக்க முடிந்தது என்றும் எலான் பதிலளித்துள்ளார்.

இரண்டு
அதாவது, முதலில் 'விரதம்' (fasting) இருப்பது. விரதம் என்றால் கடவுளை வேண்டிக்கொண்டு சாப்பிடாமல் இருப்பதல்ல. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பழங்களை மட்டும் எடுத்துக்கொண்டு புரத சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது. இதையே தான் பின்பற்றியதாகவும் எலான் கூறியுள்ளார். இரண்டாவதாக, சுவையான துரித உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது. இதன் மூலம், உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறியுள்ளார். சுவைக்காக உணவில் கலக்கப்படும் சர்க்கரை மற்றும், ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

தந்தையின் கவலை
மூன்றாவதாக மருத்துவரின் ஆலோசனை பேரில் நீரிழிவு மருந்தான Ozempic/Wegovy ஆகியவற்றை எடுத்துக்கொள்வது. பொதுவாக உடல் எடை உயரத்திற்கு ஏற்ப கணக்கிடப்படும். இது BMI என்கிற அளவில் கணக்கிடப்படுகிறது. ஆக BMI 30க்கும் அதிகமாக இருப்போருக்கு இந்த மருந்து பரிசீலிக்கப்படுகிறது. இதன் மூலம்தான் தனது உடல் எடையை எலான் மஸ்க் குறைத்ததாக கூறியுள்ளார். இவையனைத்தும் தனது நண்பர்களின் பரிந்துரையின் பேரில்தான் முயன்று பார்த்ததாகவும், இதனால் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் எலான் மஸக் கூறியுள்ளார். முன்னதாக வானொலிக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்த எலான் மஸ்க்கின் தந்தை 'எரோல் மஸ்க்' "எனது மகன் கண்டதையும் தின்கிறான். அவன் எடையை குறைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications