ஒரு பையில் பறந்த பார்சல்.. விண்வெளிக்கு தக்காளி விதைகளை அனுப்பிய எலான் மஸ்க்.. ஏன் தெரியுமா?
நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தக்காளி விதைகளை அனுப்பி வைத்து உள்ளது.
உலகம் முழுக்க தற்போது விண்வெளி பயணம் மீதான விருப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. விண்வெளி பயணம் என்பது ஆராய்ச்சிக்காக என்பது தாண்டி தற்போது சுற்றுலா, செவ்வாய் கிரக குடியேற்றம் என்ற அளவிற்கு நீண்டு உள்ளது.
தனியார் நிறுவனங்கள்தான் விண்வெளி பயணங்கள், ராக்கெட் ஏவுதளங்களில் தீவிர கவனங்களை செலுத்த தொடங்கி உள்ளன. வரும் காலத்தில் விண்வெளி சுற்றுலாவை பெரிய அளவில் நடத்த உலகின் பெரும் பணக்காரர்கள் இப்போதே களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாசா
இதனால் நாசா போன்ற அரசு நிறுவனங்கள் கூட ராக்கெட்டுகளை விடுவதை கைவிட்டு உள்ளன. மாறாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ராக்கெட்டுகளை நாசர் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி, ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைப்பு, வேற்றுகிரக ஆராய்ச்சி போன்ற ஆராய்ச்சிகளை மட்டுமே செய்து வருகிறது. ராக்கெட்டுகளை விடும் பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்பந்த அடிப்படையில் விட்டு உள்ளது.

எலான் மஸ்க்
இந்த நிலையில்தான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தக்காளி விதைகளை அனுப்பி வைத்து உள்ளது. நாசா சார்பாக தக்காளி விதைகள் அனுப்பப்பட்டு உள்ளன. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ஸ்பேஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் அனுப்பப்பட்டது. பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இந்த தக்காளி விதைகள் அனுப்பப்பட்டன. இதன் முன் பகுதியில் டிராகன் கேப்ஸ்யூல் என்ற கேப்ஸ்யூல் ஒன்று இருக்கும். இதில்தான் தக்காளி விதை இருக்கும்.

தக்காளி ஏன்?
அதே சமயம் இதற்கு 7700 பவுண்டு எடை கொண்ட ஆராய்ச்சி பொருட்கள், ஆய்வக பொருட்கள், உணவு பொருட்களும் இடம்பெற்று இருக்கும். அதேபோல் குளிர் நிலையில் ஐஸ் கிரீமும் இதில் இடம்பெற்று இருக்கும். மேலும் உப்பு காரம் போட்ட பச்சை பட்டாணி, பூசணிக்காய் கேக், ஆப்பிள் கேக் போன்ற வித விதமான உணவு பொருட்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நாளை ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஸ்பேஸ் வாக் நடக்க உள்ளது. அதாவது ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் சில வீரர்கள் வெளியே வந்து ஸ்பேஸ் வாக் செய்வார்கள்.

வெஜ் 05
இவர்கள் வெளியே வந்து ஸ்டேஷனில் இருக்கும் சோலார் பேனல்களை சரி செய்வார்கள். புதிதாக அங்கு சில சோலார் பேனல்களை பொறுத்துவார்கள். இதன் மூலம் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். விண்வெளியில், உணவு பொருட்களை விளைவித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு வகையான உணவு பொருட்கள் விண்வெளியில் விளைவிக்கப்பட்டு உள்ளது. தற்போது புதிதாக தக்காளி விதைகளை புதிய சாகுபடி முறையில் விளைவிக்க உள்ளனர்.

சோதனை
வெஜ் 05 என்ற திட்டத்தின் கீழ் தக்காளிகளை விளைவிக்க உள்ளனர். இந்த தக்காளி எவ்வளவு வளர்கிறது, எவ்வளவு வேகமாக வளருகிறது, எவ்வளவு சுவையாக உள்ளது, எவ்வளவு ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் உள்ளன. அதில் மைக்ரோபயால் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளனர். விண்வெளியில் தக்காளியை வளர்க்க முடியும். ஆனால் இதில் மற்ற ஆராய்ச்சிகளை அவர்கள் செய்தது இல்லை. இதை ஆராய்வதற்காக தற்போது விதைகள் அனுப்பப்பட்டு உள்ளன.

தக்காளி
அதேபோல் இதை சாப்பிட்டால் மனிதர்களுக்கு எப்படி இருக்கும். உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும். பாதுகாப்பானதா என்றும் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காகவே சிறிய பையில் தக்காளி விதைகள் அனுப்பப்பட்டு உள்ளன. செயற்கையான முறையில் இந்த தக்காளிகளை வளர்க்க உள்ளனர். அதன்பின் அதில் ஆராய்ச்சிகளை செய்து சோதனை முடிவுகளை வெளியிடுவார்கள்.












Click it and Unblock the Notifications