ட்விட்டரை வாங்கிய மஸ்க்.. தொடங்கிய "காஸ்ட்லி" யுத்தம்.. முதல் "பலிகடாவே" பராக் அக்ரவால்.. போச்சே!
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், நிறுவனத்தில் இருந்து முக்கியமான ஊழியர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஒப்பந்தம் காரணமாக கடந்த சில மாதங்களாக தகிப்பாக இருந்த வால் ஸ்ட்ரீட் தற்போது மீண்டும் யுத்த களமாக மாறி உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் வால் ஸ்ட்ரீடில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. என்ன நடக்கிறது ட்விட்டர் அலுவலகத்தில்? வாருங்கள் பார்க்கலாம்!
ட்விட்டர் நிறுவனத்தில் சமநிலை இல்லை.. போதிய கருத்து சுதந்திரம் இல்லை. நாம் வேண்டுமானால் ஒரு சோஷியல் மீடியா தொடங்குவோமா? வேண்டாம் ஏன் நாமளே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிவிட கூடாது என்று எலான் மஸ்க் விளையாட்டாக கேட்டதுதான் இந்த நிறுவனம் கை மாற முக்கிய காரணமாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்கி தற்போது ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக மஸ்க் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். முதலில் 5 சதவிகித பங்குகளை வைத்து இருந்தவர் அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பங்குகளை 9.2 என்ற அளவிற்கு உயர்த்தினார். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அதிக பங்கு கொண்டு இருக்கும் தனி நபராக மஸ்க் உருவெடுத்தார்.

ட்விட்டர்
முறைப்படி அதிக பங்கு வைத்திருந்த அவர் தனக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் விருப்பம் இல்லை என்று முதலில் பங்குதாரர்கள் பைலிங்கில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன்பின் போர்ட் உறுப்பினர்களின் குழுவில் இணைய மறுத்தார். இதற்கான அழைப்பை சிஇஓ பராக் அக்ரவால் விடுத்து இருந்தார். ஆனாலும் கூட போர்ட் உறுப்பினர்களின் குழுவில் அவர் இணையவில்லை. போர்ட் உறுப்பினர் குழுவில் இருந்தால் மஸ்க் 14.5 சதவிகித பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது. அதன்பின்தான் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை இந்திய மதிப்பில் ரூபாய் 4120 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளார்.

எத்தனை
மொத்தமாக 100 சதவிகித ஷேரையும் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 37 பில்லியன். இதை மொத்தமாக 44 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்தார். இதை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் தன்னிடம் பிளான் பி இருக்கிறது என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார். அதாவது 100 சதவிகித பங்குகளையும் வாங்கி, ட்விட்டர் நிறுவனத்தை வர்த்தகத்தில் இருந்தே நீக்கி, முழு தனியார் நிறுவனமாக மாற்ற முடிவு எடுத்தார்.

போர்ட் உறுப்பினர்கள்
இதில் பங்குகளுக்கு அவர் நல்ல விலை கொடுத்த காரணத்தால் போர்ட் உறுப்பினர்கள், இந்த ஆபரை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் பங்குதாரர்களுக்கு லாபம் தர வேண்டிய டீலிங்கை ஏற்றுக்கொள்ள வேண்டியது சட்டப்படி போர்ட் உறுப்பினர்களின் கடமை. மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன.ஏனென்றால் ட்விட்டரில் பெரும்பான்மை பங்குகளை மஸ்க்தான் வைத்து இருந்தார். இதனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் போன்ற பங்குதாரர்களின் கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும். ஒருவேளை மஸ்க் கொடுத்த ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் அது பங்கு ரீதியாக அந்த நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம்.

கடன்
இந்த டீலிற்காக 21 மில்லியன் டாலரை தனது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இது போக மீதம் உள்ள தொகையை டெஸ்லா பங்கு, ட்விட்டர் பங்கு ஆகியவற்றின் மீது லோனாக எடுத்தார். இதற்காக மார்கன் ஸ்டான்லி வங்கியை அவர் அணுகினார். இடையில் ட்விட்டரில் உள்ள பாட் கணக்குகளின் சதவிகிதம் என்ன என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதாக இந்த விற்பனை ஹோல்ட் செய்யப்பட்டது. நிறுவனத்தை வாங்குவதாக கூறிவிட்டு, வாங்கவில்லை என்றால் பங்குகள் மோசமாக சரியும், நாங்கள் வழக்கு தொடுப்போம் என்று போர்ட் உறுப்பினர்கள் கூறிய காரணத்தால், கடைசியில் ட்விட்டர் நிறுவனத்தை ஒருவழியாக வாங்க மஸ்க் முடிவு செய்தார்.

இறுதி ஒப்பந்தம்
இதற்கான இறுதி ஒப்பந்தம் நேற்று முறையாக போடப்பட்டது. இந்த நிலையில்தான் ட்விட்டர் அலுவலகம் உள்ளே காஸ்ட்லி யுத்தம் தொடங்கி உள்ளது. முன்னதாகவே ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் மஸ்க் - சிஇஓ பராக் அக்ரவால் இடையே கடமையான மோதல் ஏற்பட்டது. முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தை பொதுவில் மஸ்க் திட்டியதை பராக் விமர்சனம் செய்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மஸ்க்.. பராக்கிடம்.. நீ இந்த வாரம் என்ன வேலை செய்தாய் என்றெல்லாம் கோபமாக கேட்டு இருக்கிறார். முதலில் நண்பர்களாக இருந்த இருவரும் இந்த டீலிங் காரணமாக எதிரிகளாக.மாறினார்கள்

நீக்கம்
இந்த நிலையில்தான் ட்விட்டர் டீலிங் முடிந்து 24 மணி நேரத்திற்கு உள்ளாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து பராக் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ட்விட்டர் அலுவலகத்தில் இருந்து இவர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ட்விட்டர் அலுவலகமே அரண்டு போய் உள்ளது. மஸ்க் பலரை வேலையில் இருந்து தூக்க போவதாக தகவல் வந்த நிலையில்தான் ஆரம்பமே சிஇஓ நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications