மனித குலத்திற்கே ஆபத்து.. எலான் மஸ்க் சொன்ன மாதிரியே நடக்குதே.. ஸ்டன் ஆன உலகின் டாப் நாடுகள்
நியூயார்க்: சமீபத்தில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை ஒன்று பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது நடக்க தொடங்கி உள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. அதாவது பிறப்பு விகிதம் குறைந்து மக்கள் தொகை எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க மக்கள் தொகை பிரச்சனை கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அதிகமாக இருந்தது. மக்கள் தொகை வேகமாக உயர்கிறது என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இப்போது திடீரென மக்கள் தொகை குறைவு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சீனாவில் கூட இரண்டு குழந்தை முறை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது.
சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. . மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்ப தொடங்கியது. ஆம் அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது.

ஜப்பான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் குறைந்து கஷ்டப்படும் நிலைக்கு சென்றது. இதையடுத்து சீனா புதிய குடும்ப கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்தது. அதேபோல் ரஷ்யாவும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 10 குழந்தைகளை பெற்றுக்கொண்டால்.. கடைசி குழந்தைக்கு 14 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மக்கள் தொகை வேகமாக குறைவது தற்போது பல நாடுகளுக்கு பிரச்சனை ஆகி உள்ளது. எலான் மஸ்க் இதே பிரச்சனையை சுட்டிக்காட்டி உள்ளார்.
உலக அளவில் பிறப்பு விகிதம் வேகமாக குறைகிறது. - 1950: ஒரு பெண்ணுக்கு 4.9 குழந்தைகள் வீதம் பிறந்தது. தற்போது - 2023: ஒரு பெண்ணுக்கு 2.3 குழந்தைகள் வீதம் பிறக்கிறது. உலக மக்கள் தொகை சரிவு மக்கள் உணர்ந்ததை விட வேகமாக ஏற்படுகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க நாம் இப்போதே செயல்பட வேண்டும். உடனே மக்கள் தொகை உயர்வதை உறுதி செய்ய வேண்டும். அதிலும் ஐரோப்பா மோசமாக மாறிவிட்டது. அங்கே 1.4 குழந்தைகள் வீதம்தான் ஒரு பெண்ணுக்கு பிறக்கிறார்கள். ஐரோப்பா அழிய தொடங்கிவிட்டது. அங்கே பெண்கள் இன்னும் 2 குழந்தைகள் வீதம் கூடுதலாக பெற்றுக்கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் ஐரோப்பா மக்கள் தொகை மாயமாகிவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
பின்வரும் நாடுகளில் மக்கள் தொகை கடுமையாக சரிந்து உள்ளது
1. தென் கொரியா: 88%
2. சீனா: 83%
3. தாய்லாந்து: 81%
4. ஜப்பான்: 80%
5. ஈரான்: 75%
6. பிரேசில்: 74%
7. கொலம்பியா: 72%
8. மெக்சிகோ: 72%
9. போலந்து: 71%
10. துருக்கி: 70%
11. ரஷ்யா: 69%
12. சவுதி அரேபியா: 69%
13. மலேசியா: 68%
14. மொராக்கோ: 67%
15. உக்ரைன்: 67%
16. போர்ச்சுகல்: 66%
17. இத்தாலி: 66%
18. கனடா: 65%
19. இந்தியா: 65%
20. பெரு: 65%
21. பங்களாதேஷ்: 64%
22. மியான்மர்: 63%
23. ஸ்பெயின்: 63%
24. வியட்நாம்: 62%
25. இந்தோனேசியா: 61%
26. அல்ஜீரியா: 60%
27. எகிப்து: 59%
28. நேபாளம்: 59%
29. பிலிப்பைன்ஸ்: 58%
30. வெனிசுலா: 57%
31. தென்னாப்பிரிக்கா: 54%
32. அமெரிக்கா: 54%
33. ஆஸ்திரேலியா: 53%
34. பின்லாந்து: 52%
35. ஸ்வீடன்: 51%
36. பிரான்ஸ்: 51%
37. நெதர்லாந்து: 50%
38. ஐஸ்லாந்து: 50%
39. அர்ஜென்டினா: 49%
40. நார்வே: 49%
41. நியூசிலாந்து: 48%
42. டென்மார்க்: 48%
43. பெல்ஜியம்: 47%
44. ஆஸ்திரியா: 46%
45. கென்யா: 46%
46. ஜெர்மனி: 45%
47. சுவிட்சர்லாந்து: 45%
48. லக்சம்பர்க்: 44%
49. ஏமன்: 44%
50. அயர்லாந்து: 43%
51. கானா: 43%
52. உஸ்பெகிஸ்தான்: 42%
53. ஈராக்: 41%
54. எஸ்டோனியா: 41%
55. ஐக்கிய இராச்சியம்: 40%
56. லாட்வியா: 40%
57. லிதுவேனியா: 39%
58. செக் குடியரசு: 38%
59. பாகிஸ்தான்: 38%
60. ஸ்லோவாக்கியா: 37%
61. ஹங்கேரி: 36%
62. ஸ்லோவேனியா: 35%
63. குரோஷியா: 34%
64. போஸ்னியா & ஹெர்சகோவினா: 33%
65. செர்பியா: 32%
66. மாண்டினீக்ரோ: 31%
67. வடக்கு மாசிடோனியா: 30%
68. அல்பேனியா: 29%
69. பல்கேரியா: 28%
70. ருமேனியா: 27%
71. மால்டோவா: 26%
72. கிரீஸ்: 25%
73. சைப்ரஸ்: 24%
74. இஸ்ரேல்: 23%
75. ஜோர்டான்: 22%
76. நைஜீரியா: 21%
77. லெபனான்: 21%
78. சிரியா: 20%
79. ஜமைக்கா: 19%
80. கொரிய ஜனநாயக குடியரசு: 10%
மஸ்க் விடுத்த எச்சரிக்கை
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் வல்லவர். தனக்கு மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே பேச கூடியவர் எலான் மஸ்க். தனது பேச்சால் என்ன விளைவு ஏற்படும், என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பற்றியெல்லாம் இவர் கவலையே பட மாட்டார். பல சமயங்களில் இப்படி சர்ச்சைக்குரிய விஷயங்களை எலான் மஸ்க் பேசி உள்ளார். இதனால் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில்தான் மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் பேசி உள்ளார். அதன்படி, குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக மக்கள் தொகை குறைவது என்பது இந்த மனித குலத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். காலநிலை மாற்றத்தை விட மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் பெரிய ரிஸ்க்தான். ஆனால் நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவால் பிரச்சனை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications