ரியல் தக் லைஃப்.. அமெரிக்காவே சின்னாபின்னம் ஆக போகிறது.. மஸ்க் - டிரம்ப்.. 2 ஈகோக்காரர்களின் யுத்தம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அதிபர் டிரம்ப் - டெஸ்லா எலான் மஸ்க் இடையிலான மோதல் அதிகாரமிக்க வாஷிங்டன் அரசியல் வட்டத்திற்குள் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது. பல்வேறு ரகசியங்களை தெரிந்த மஸ்க் உடன் டிரம்ப் மோதி இருப்பது.. அமெரிக்க அரசியலில், ஆட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, ஜனவரி 20, 2025 அன்று தனது பதவியேற்பு உரையின்போது, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ஜே. டிரம்ப், எலான் மஸ்கை ஒரு "சூப்பர் ஜீனியஸ்" மற்றும் "நட்சத்திரம்" என்று பாராட்டினார். டிரம்ப்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு கொண்டு வருவதற்காக 100 மில்லியன் டாலர்களை செலவு செய்த மஸ்க், டிரம்ப்பின் கூட்டாளி மட்டுமல்ல; டிரம்ப்பின் உலகில், அவர் குடும்பம் போன்றவர்.

தேர்தல் முடிவு வந்த இரவு மார்-ஏ-லாகோவில் தனது இளம் மகன் "எக்ஸ்"-ஐ தோளில் சுமந்து கொண்டு, வெற்றி பெற்ற டிரம்ப் குடும்பத்துடன் கொண்டாட்டமாக புகைப்படம் எல்லாம் எடுத்துள்ளார் டிரம்ப். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த 5-6 வருடங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேரடியாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஒரு காலத்தில் ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாக தீவிர வலதுசாரியாக மாறி குடியரசு கட்சி ஆதரவாளராக மாறிவிட்டார்.

கடந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் நேரடியாக எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு கொடுத்தார். அதோடு அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு நிதி வழங்கினார். அந்த தேர்தலில் டிரம்ப் ஜெயிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக டிரம்ப் மாறினார்.

Elon Musk s fight with Donald Trump gets ugly Thug Life style actions are expected in coming days

டிரம்ப் - மஸ்க் பிளவு: ஒரு கண்ணோட்டம்

ஆனால் அந்த புதிய உறவு, நட்பு எல்லாம், ஒரு குறுகிய காலமே நீடித்தது. ஜூன் முதல் வாரத்தில், அதே நட்பு பெரிய கசப்பாக மற்றும் துரோகமாக வெடித்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரரின் ஈகோ, உலகின் சக்திவாய்ந்த தலைவரின் பிடிவாதத்துடன் மோதியது.

மஸ்க் ஈகோ பிடித்தவர்.. டிரம்ப் கோபக்காரர். இவர்கள் இருவரும் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும். அதுதான் நம்ம ராமதாஸ் - அன்புமணி மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? அதாவது தக் லைஃப் கமல் - சிம்பு மோதல் போல.. அப்படித்தான் இதுவும்.

பரஸ்பர லட்சியத்தில் உருவாக்கப்பட்ட அவர்களின் கூட்டணி, அவர்களின் சுயநலத்தால் வீழ்ச்சியடைந்தது. டிரம்ப்-மஸ்க் மேற்கொள்ளும் இந்த மோதல் எப்படி அமெரிக்க வரலாற்றில் ஒரு பகிரங்கமான, அற்பமான மற்றும் அரசியல்ரீதியாக முக்கியமான முறிவாக மாறியது என்பதைப் பார்ப்போம்.

கிங்மேக்கரும் அவரது ராஜாவும்

இந்த பிரமாண்ட கூட்டணியின் விதைகள் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி மாதங்களில் விதைக்கப்பட்டன. எலான் மஸ்க் ஒரு அமெரிக்க குடிமகன் இல்லாததால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியவில்லை. அதனால் டிரம்ப்பை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர.. கிங் மேக்கர் ஆகும் முயற்சியில் இறங்கினார். அக்டோபர் 27, 2024 அன்று நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் டிரம்ப் பேரணியில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

பிலடெல்பியாவின் புறநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில், "அமெரிக்காவின் எதிர்காலம்" மற்றும் "நாகரிகமே" ஆபத்தில் உள்ளது என்று கூறி, மேடை ஏறினார். பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில், "அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவோம்" என்ற கருப்பு தொப்பியை அணிந்து, தன்னை "MAGA மட்டுமல்ல, நான் டார்க் MAGA" என்று முத்திரை குத்தினார். MAGA என்றால் Make America Great Again.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

இதன் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அந்த பதவியை மஸ்க் ராஜினாமாவும் செய்துவிட்டார்.


என்ன கருத்து வேறுபாடு?

சமீபத்தில் பென்டகன் அமைப்பின் சில போர் ரகசியங்கள் கசிந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுடன் அமெரிக்கா போர் செய்வதாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று DOGE தலைவர் எலான் மஸ்க்கிடம் விளக்கப்பட்டதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பென்டகன் உடன் கடந்த மாதம் எலான் மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதே சமயம் சீனா உடன் போர் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்தன. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பென்டகன் ஆலோசனை நடத்துவதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனை செய்யலாம் என்றும் மஸ்க் உடன் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதை டிரம்ப் மறுத்தார். இந்த விவகாரம் பெரிதானதும் அலறியடித்து பதில் சொன்ன டிரம்ப்.. அப்படி ஆலோசனை நடக்கவில்லை என்று கூறி இருந்தார். அதே சமயம் பென்டகன் அளித்த விளக்கத்தில் பென்டகன் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் சீனாவின் போர் பற்றி எல்லாம் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்த விவகாரம் பொய் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்து இருந்தார். இந்த நிலையில்தான் அது பொய் கிடையாது. உண்மைதான் என்று தகவல் வெளியாகி உள்ளது. சீனா உடன் போர் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக.. சீனாவை தாக்கினால் எப்படி எல்லாம் தாக்குவார்கள்.. என்பது பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டு டிரம்ப் அதிர்ச்சி அடைந்ததாகவும்.. இனிமேல் மஸ்க்கிடம் இது போன்ற விவரங்களை விவாதிக்க கூடாது.. அங்கே அவருக்கு என்ன வேலை.. நீங்கள் அவரிடம் இதை எல்லாம் சொல்கிறீர்கள் என்றும் டிரம்ப் பென்டகன் அதிகாரிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அரசியலில் இருந்து விலகல்

இந்த நிலையில் அரசியலில் நிதி அளிப்பதை நிறுத்த போவதாக அல்லது அடியோடு குறைக்க போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுவரை நிறைய கொடுத்துவிட்டேன்.. இனி கொடுக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

அவருக்கு தனிப்பட்ட வகையில் பொருளாதார சிக்கல் மற்றும் அவரின் அரசியல் நிலைப்பாடு காரணமாக டெஸ்லா பங்குகள் சரிவு உள்ளிட்ட காரணங்களால் அரசியலில் நிதி அளிப்பதை நிறுத்த போவதாக அல்லது அடியோடு குறைக்க போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். நான் நிறைய செய்துவிட்டேன் போதும் இனி செய்ய விரும்பவில்லை என்று மஸ்க் கூறி உள்ளார்.

மோதல்

ஜூன் 3 அன்று, டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதாவை மஸ்க் பகிரங்கமாக விமர்சித்தார். மேலும் இது நாட்டின் கடனை அதிகரிக்கும் என்றும் கூறினார். அவரது சமூக ஊடக பதிவுகள் குடியரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களுக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை. ஜூன் 5 அன்று, டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மஸ்க் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் மஸ்க் அந்த மசோதாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விலக்குகளை நீக்கியதால் கோபமடைந்துள்ளதாகக் கூறினார்.

டிரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் போதே, மஸ்க் கோபத்துடன் எக்ஸ் தளத்தில் பதிலளித்தார். "நான் இல்லாமல் டிரம்ப் தேர்தலில் தோற்று இருப்பார்.. அவர் நன்றி கேட்டவர்" என்று பதிவிட்டார். இதற்கு உடனே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், மஸ்கின் வணிக சாம்ராஜ்யத்தை குறிவைத்து ஒரு கருத்தை வெளியிட்டார். "நமது பட்ஜெட்டில் பணத்தை சேமிக்க எளிதான வழி, எலான் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதுதான்" என்று அவர் எழுதினார். "தைரியமிருந்தால் இதைச் செய்யுங்கள்" என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிலளித்தார்.

இந்த மோதல் காரணமாக ஒரே நாளில் டெஸ்லா பங்குகள் 150 பில்லியன் டாலர் மதிப்பு குறைந்தது. மஸ்கின் தனிப்பட்ட சொத்துக்கள் சுமார் 20 பில்லியன் டாலர் குறைந்தது. டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு எக்ஸ் பயனர் கேட்ட கேள்விக்கு, மஸ்க் "ஆம்" என்று பதிலளித்தார். மேலும் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகளை விமர்சித்தும் கருத்து தெரிவித்தார். நாசாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஒரே அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை நிறுத்தப்போவதாக மிரட்டினார்.

அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று தனது பின்தொடர்பவர்களிடம் ஒரு வாக்கெடுப்பும் நடத்தினார். மேலும் டிரம்ப்பின் சட்டத்தை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சம் அடைந்து உள்ளது. டிரம்ப் பற்றிய பல ரகசியங்கள் மஸ்க்கிற்கு தெரியும். மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்பதால் இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் அமெரிக்க அரசியலையே பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+