அமெரிக்காவின் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்! ஆனந்த் சீனிவாசன் விடுத்த மெகா எச்சரிக்கை! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் விடுத்துள்ள எச்சரிக்கையில், இது உலக மயமாக்கலின் முடிவு. இனிமேல் பாதுகாப்புவாதம் எனப்படும் protectionismத்தின் தொடக்கம் இது. டாலர் மதிப்பு இதனால் உயரும். தங்கத்தின் விலை அடுத்த சில காலத்திற்கு குறையும். அமெரிக்காவின் மத்திய வங்கி தலைவர் ஜெரோம் போவெல் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

us presidential election 2024 kamala harris donald trump

மக்கள் ஆட்டம் மந்தையாக இருந்தால்.. ஆட்டு மந்தையாகவே முடிவு எடுப்பார். தவறுகளையும் ஆட்டு மந்தையாகவே செய்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாகவே இவர்கள் வெளியே வருவார்கள் என்று பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் கூறி உள்ளார்.

அமெரிக்கா பரந்த நாடாக இருப்பதில் இருந்து மாறி.. இனி எல்லைகளை பாதுகாக்கும். எளிதாக எல்லோரும் அமெரிக்காவில் குடியேற முடியாது. இதையே இனிமேல் பாதுகாப்புவாதம் எனப்படும் protectionismத்தின் தொடக்கம் இது என்று ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டு உள்ளார்.

அதிபர் தேர்தல் வெற்றி: அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 267 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 214 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபராகிறார்.

உரை: தேர்தல் வெற்றிக்கு பின் டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.

நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றி அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.

நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.

அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்து உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+