இந்தியாவில் தாக்கலாகும் ஒரு மசோதாவை.. அமெரிக்கா பாய்ந்து வந்து எதிர்ப்பது ஏன்? என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அன்னியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா (FCRA), 2026 என்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது. இதை தற்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க தொடங்கி உள்ளனர். இந்த மசோதா கிறிஸ்தவ அமைப்புகளையும் தேவாலயங்களையும் பாதிக்கும்.. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களை பாதிக்கும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த மசோதா தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகள் எழுப்பிய எதிர்ப்புகளுக்கு அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா விளக்கம் அளித்துள்ளார். இந்த மசோதாவானது வெளிநாட்டு நிதியுதவிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும், சிறந்த நிர்வாகம் மற்றும் தெளிவான விதிகளையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

christian usa

சமூக வலைத்தள தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா, FCRA மசோதா குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடையே பரவி வரும் பல்வேறு தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொய் vs உண்மை என்ற தலைப்பில் விளக்கங்களை பகிர்ந்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு

தொண்டு நிறுவனங்களுக்கும், சிவில் சமூக அமைப்புகளுக்கு வரும் வெளிநாட்டு உதவிகளைத் தடுப்பதற்காகவே இந்தியா இந்த புதிய சட்டத்தை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டை வினய் குவாத்ரா முற்றிலுமாக மறுத்துள்ளார். பொது மற்றும் அரசியல் அமைப்புகளும் வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்துவது என்பது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு இறையாண்மை சார்ந்த நடவடிக்கை என்றும், உலகளவில் பல ஜனநாயக நாடுகளில் இது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் முதன்முதலில் 1976-இல் எஃப்சிஆர்ஏ சட்டம் கொண்டுவரப்பட்டு, பின்னர் 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் வலுப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த 2026 மசோதாவும் விதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. சட்டப்படி செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதை இச்சட்டம் தடுக்கவில்லை; கல்வி, சுகாதாரம், பேரிடர் நிவாரணம் போன்ற மனிதநேயப் பணிகளுக்காகப் பல ஆயிரம் அமைப்புகள் இப்போதும் தொடர்ந்து நிதி பெற்று வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான கட்டுக்கதைகள்

இந்த சட்டத் திருத்தம் என்ஜிஓக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்கும் என்ற கூற்றையும் தூதர் நிராகரித்தார். பதிவுசெய்யப்பட்ட அமைப்புகள் பெற்ற வெளிநாட்டு நிதி 2010-11 இல் 1.2 பில்லியன் டாலராக இருந்தது, 2024-25 இல் 2.67 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ள நிலையில், வெறும் 14,450 அமைப்புகள் மட்டுமே FCRA பதிவைப் பெற்றுள்ளன. எனவே, பெரும்பாலான அமைப்புகள் இச்சட்டத்தின் எல்லைக்கு வெளியேதான் இயங்குகின்றன.

எஃப்சிஆர்ஏ சட்டம் யாருடைய நன்கொடையையோ அல்லது ஆராய்ச்சி நிதியையோ தடுக்கவில்லை. பதிவு செய்யுங்கள், சரியான வழியில் நிதியைப் பெறுங்கள், அதை எதற்காகப் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிக்கை சமர்ப்பியுங்கள் ஆகிய மூன்று எளிய விஷயங்களையே சட்டம் கேட்கிறது என்று குவாத்ரா கூறினார்.

சொத்துக்கள் பறிமுதல்

ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளிநாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்திற்கும் அவர் பதிலளித்தார். பதிவு ரத்தாகும் போது அந்தச் சொத்துக்கள் மாநில அரசு அதிகார அமைப்பின் பொறுப்பில் வருவது 2010 முதல் நடைமுறையில் உள்ள ஒன்றுதான். 2026 மசோதா, அந்தச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், அந்த அமைப்பு தனது பதிவை மீண்டும் பெறும்போது சொத்துக்களையும் பயன்படுத்தப்படாத நிதியையும் முழுமையாகத் திருப்பியளிக்கவும் ஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பை இந்த உருவாக்குகிறது.

வழிபாட்டுத் தலங்களுக்கு இதில் தனிப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பதிவு ரத்து செய்யப்பட்ட அமைப்பின் வழிபாட்டுத் தலச் சொத்துக்கள், தொடர்ந்து வழிபாடுகள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் அதே மதத்தைச் சேர்ந்த மற்றொரு FCRA பதிவுபெற்ற அமைப்பிற்கு மாற்றப்படும்.

மதச் சார்பற்ற பொதுவான சட்டம்

இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ குறிவைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், மதம், சமூகம் அல்லது சித்தாந்த வேறுபாடின்றி அனைத்து அமைப்புகளுக்கும் இச்சட்டம் ஒரே மாதிரியாகப் பொருந்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அமெரிக்காவின் FARA சட்டம், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனின் சட்டங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் விமர்சனமும் இந்தியாவின் நிலையும்

முன்னதாக, அமெரிக்கச் செனட்டர் ஜேம்ஸ் ரிஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிலே மூர் ஆகியோர் இந்த மசோதா கிறிஸ்தவ அமைப்புகளையும் தேவாலயங்களையும் பாதிக்கும் என கவலை தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள் நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதில் நாட்டின் நாடாளுமன்றமே முடிவுகளை எடுக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+