நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

25 வருடங்களில் முதல்முறை.. துப்பாக்கி சூடே இல்லாத வார இறுதி.. நியூயார்க்கில் அதிசயம் பாஸ்!

நியூயார்க்கில் முதல்முறை எந்த துப்பாக்கி சூடும் நடக்காமல் ஒரு வாரம் கழிந்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க்கில் முதல்முறை எந்த துப்பாக்கி சூடும் நடக்காமல் ஒரு வாரம் கழிந்து இருக்கிறது.

அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் ஆகிவிட்டது. பள்ளி மாணவர்கள் கூட துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவது வழக்கமாகி உள்ளது.

இதை அரசு எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் குழம்பி வருகிறது. போலீஸ் என்ன செய்தும் எங்காவது ஒரு இடத்தில் இப்படி துப்பாக்கி சூடு நிகழ்ந்துவிடுகிறது.

மிக மோசம்

மிக மோசம்

அதிலும் வார இறுதி நாட்கள் என்றால் துப்பாக்கி சூடு மிக அதிகமாக நடக்கும். சராசரியாக நியூயார்க்கில் வார இறுதி நாட்களில் 6-8 துப்பாக்கி சூடு நடக்கும். போதையில் யாராவது யாரையாவது சுட்டு சேதம் ஏற்படுத்துவதும், கொலை செய்வதும் வார இறுதி நாட்களில் அதிகம் நடக்கும்.

கடைசியாக எப்போது

கடைசியாக எப்போது

இது போல வார இறுதி நாட்களில் துப்பாக்கி சூடு நடக்காமல் இருந்த ஒரு வாரம் என்றால் அது 25 வருடங்களுக்கு முன்புதான். 1993ல் மே மாதம் இறுதி வாரம் எந்த துப்பாக்கி சூடும் நடக்கவில்லை. அதன்பின் எல்லா வாரமும் நியூயார்க்கில் துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது.

சென்ற வாரத்திற்கும் முன் எப்படி இருந்தது

சென்ற வாரத்திற்கும் முன் எப்படி இருந்தது

சென்ற வாரத்திற்கும் முதல் வாரமும் நியூயார்க்கில் நிறைய துப்பாக்கி சூடு நடந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நியூயார்க்கில் அது மோசமான வாரங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டு இருக்கிறது. சென்ற வாரத்திற்கும் முதல் வாரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 12 துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

சென்ற வாரம் சிறப்பு

சென்ற வாரம் சிறப்பு


இந்த நிலையில்தான் கடந்த வாரம் எந்த துப்பாக்கி சுடும் அதிசயமாக் நடக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த விதமான துப்பாக்கி சூடும் நடக்கவில்லை. கடந்த 25 வருடங்களில் முதல்முறையாக இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது.

English summary
Finally, New York passed a week end without any gun shot after 25 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X