நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
நியூயார்க்: உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இடையே மோதல்கள், போர்கள் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா , யு.கேவிற்கு அதிகாரபூர்வமாக அணு ஆயுத அட்டாக் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த திங்களன்று வட கொரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை உண்மையில் அணுசக்தி அட்டாக் செய்வதற்கான தயார்நிலையை சோதிக்கும் ஒரு பயிற்சி என்று உலக நாடுகள் தெரிவிக்கின்றன.

பியாங்யாங்கிற்கு அருகே பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள நீரில் விழும் வகையில் சுமார் 185 மைல்கள் பறந்து சென்ற தாக்கும் வகையில் சோதனை செய்யப்பட்டது
எவ்வாறாயினும், இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், வடகொரியா நாட்டின் அணுசக்தி படைகளின் நம்பகத்தன்மை, மேன்மை, வலிமை மற்றும் பல்வேறு வழிகளை நிரூபிப்பது ஆகும். அதோடு வட கொரியாவின் எதிரிகளுக்கு தெளிவான எச்சரிக்கை வார்னிங்கை வழங்கும் அணு அணு ஆயுத எச்சரிக்கை கருவியான ஹேக்பங்காஷோ அமைப்பை சோதனை செய்வது ஆகும்.
அந்த நாட்டில் அணு ஆயுதம் ஏவப்படுகிறது என்றால் ஹேக்பங்காஷோ எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த எச்சரிக்கைதான் கடந்த திங்கள் அன்று விடுக்கப்பட்டது. உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இடையே மோதல்கள், போர்கள் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா , யு.கேவிற்கு இதன் மூலம் அதிகாரபூர்வமாக அணு ஆயுத அட்டாக் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியா அணு ஆயுத போர், அணு ஆயுத பதிலடி தாக்குதல் நடத்த போகிறது என்றால் ஹேக்பங்காஷோ அமைப்பை சோதனை செய்து அதில் எச்சரிக்கை மணி அடிக்கும். அதைத்தான் திங்கள் கிழமை அந்த நாடு சோதனை செய்துள்ளது. வடகொரியா - தென்கொரியா போர் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில்தான் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
போர் பின்னணி: தென் கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் 1950ல் நடந்த கொரிய போரில் இருந்தே மோதல்கள் நிலவி வருகின்றன. இரண்டாம் உலகப்போரின் முடிவில் 1945ல் கொரியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று இரண்டாக பிரிந்தது.
அடுத்த 5 வருடங்களில் இந்த பகுதிகள் ஒன்றாக இணைய வேண்டும். ஆனால் பனிப்போர் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா மோதிக்கொண்டு, கடைசியில் அது கொரிய போருக்கும் வித்திட்டது. போரின் முடிவில் ரஷ்யாவின் ஆதரவில் வடகொரியா என்ற நாடும், அமெரிக்காவின் ஆதரவில் தென் கொரியா என்ற நாடும் உருவானது.
அப்போதில் இருந்து வடகொரியா கம்யூனிச நாடாக இருந்து வருகிறது. அங்கு கிம் ஜோங் உன் குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. தென் கொரியாவில் அமெரிக்கா நடத்திய தேர்தல் மூலம் வலதுசாரி ஆட்சி முறை அமலுக்கு வந்தது. இதில் வடகொரியாவிற்கு சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிச நாடுகள் போரின் சமயத்தில் உதவி செய்தன. அதில் இருந்து வடகொரியா அமெரிக்காவிற்கு எதிராகவும், ரஷ்யா, சீனாவிற்கு நெருக்கமாகவும் இருந்து வருகிறது. இதே நிலைதான் தற்போதும் நீடித்து வருகிறது.
வரலாற்று ரீதியாகவே எப்போதும் வடகொரியா அமெரிக்கா உறவு சரியாக இருந்தது கிடையாது. தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடாகவும், வடகொரியா சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகளின் ஆதரவாகவும் இருந்து வந்துள்ளது. கிம் ஜோங் உன் வடகொரியா அதிபரான பின் அமெரிக்கா வடகொரியா உறவு மிக மோசமான நிலையை எட்டியது. முக்கியமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி அமெரிக்காவிற்கு சவால் விட்டது.
அணு ஆயுத ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்து அமெரிக்காவிற்கு வடகொரியா நேரடியாக சவால் விட்டது. அமெரிக்காவும் வடகொரியாவை பல இடங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. அமெரிக்காவில் டிரம்ப் அதிபரான பின் இரண்டு நாட்டு உறவு மிக மோசமான நிலையை அடைந்தது.
மோசமான சூழ்நிலை: 2020ம் வருட தொடக்கத்திலேயே டிரம்ப் வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவேன் என்று குறிப்பிட்டார். என்னுடைய சீட்டிற்கு அருகில்தான் பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினேன் என்றால் உங்கள் நாட்டில் அணு குண்டு வெடிக்கும். உங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை விட எங்களிடம் அதிகமாக இருக்கிறது, வடகொரியா எங்களிடம் மோத கூடாது.
கவனமாக இருங்கள் என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்குமோ என்ற அச்சமும் பதற்றமும் நிலவியது. கடந்த சில வாரங்களாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை அதிகப்படுத்தி வந்தது. திடீரென அதிக தொலைவில் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது இரண்டு தரப்பிற்கும் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications