"கைவிலங்கு.." சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வரும் டிரம்ப்! அடுத்து என்ன நடக்கும்
நியூயார்க்: ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். அவருக்கு அங்கே என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், இப்போது கடந்த வாரம் தான் ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இது அவருக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
அடுத்தாண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட இருக்கும் நிலையில் தான் இப்படி நடந்துள்ளது. இன்று அவருக்கு நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.

டிரம்ப்
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தேர்தலில் தான் டிரம்ப் வென்று அதிபராகத் தேர்வாகியிருந்தார். அது தேர்தல் காலம் என்பதால் தன்னை பாதிக்கும் வகையிலான செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டார். அப்போதுதான் டிரம்புடன் உறவில் இருந்தது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று அமெரிக்காவின் பிரபல ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவரிடம் டிரம்ப் தரப்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இதற்காக 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுக்கப்பட்டது.

பெலனி குற்றம்
இதில் எந்தவொரு விதிமீறலும் இல்லைதான். ஆனால், டிரம்ப் அந்த பணத்தை எப்படி கணக்குக் காட்டினார் என்பதில் தான் பிரச்சினை. டிரம்ப் இதைத் தனது பிரசாரத்திற்குப் பயன்படுத்திய பணத்தைப் போலக் கணக்குக் காட்டிவிட்டார். இந்த நிதி முறைகேடு நியூயார்க் சட்டப்படி பெலனி குற்றமாகும். டிரம்ப்பின் வழக்கறிஞராக இருந்து ஒப்பந்தம் போட்டவர் டிரம்பிற்கு எதிராக வாக்குமூலமே கொடுத்துவிட்டார். இதனால், டிரம்ப் தவறு செய்துள்ளதாக ஜூரி தெரிவித்துவிட்டது. இதையடுத்து டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குற்றவாளி
டிரம்ப் அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது. குடியரசு கட்சியில் அவருக்குப் பெரிய செல்வாக்கு இருப்பதால், எளிதாக அவர் அதிபர் வேட்பாளராகத் தேர்வாவார். ஆனால், கடந்த வாரம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது அவருக்குக் கட்சிக்குள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒருவர் இதுபோல கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். இருப்பினும், டிரம்ப் தான் ஒரு நிரபராதி என்றும் ஸ்டோர்மி டேனியல்ஸை சந்தித்ததே இல்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.

அடுத்து என்ன
சரி விஷயத்திற்கு வருவோம். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவருக்கு அங்கே என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம். இன்று டிரம்பிற்கு ஆதரவாக நியூயார்க் நீதிமன்றத்தில் போராட்டங்கள் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு நடுவே டிரம்ப் சரணடையவுள்ளார். நியூயார்க் நேரப்படி மதியம் 2.15 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவில்) அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். அப்போது டிரம்பின் கைரேகை எடுக்கப்படும்.

கைவிலங்கு
மேலும், கைதிகளுக்கு எடுக்கப்படுவதைப் போலப் பல ஆங்கில்களில் இருந்து அவரது போட்டோ எடுக்கப்படும். வழக்கமாக பெலனி குற்றவாளிகளுக்கு கை விலங்கு மாட்டப்படும். ஆனால் டிரம்ப் முன்னாள் அதிபர் என்பதால் இதில் இருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுமா எனத் தெரியவில்லை. வழக்கமாக பெலனி குற்றச்சாட்டில் கைதாகும் நபர்கள் கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்து கை விலங்கிடப்படும். சில சமயம் முன்னால் கூட வைத்து விலங்கு போடுவார்கள்.

சீக்ரெட் சர்வீஸ்
டிரம்பிற்கு போலீசார் என்ன செய்யப் போகிறார்கள் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். டிரம்ப் ஒரு முன்னாள் அதிபர் என்பதால் அமெரிக்க சட்டப்படி அவருக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. எனவே, டிரம்ப் மன்ஹாட்டனின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவருக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு இருக்கும். டிரம்ப் ஆதரவாளர்கள் மிகப் பெரிய போராட்டத்தையும் திட்டமிட்டுள்ள நிலையில், என்ன நடக்கப் போகிறது என்பது சில மணி நேரத்தில் தெரியும்
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications