Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழுதைதான் பேப்பரைச் சாப்பிடும்.. இப்போ நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா ஆபிசர்?

ஆடு ஒன்று தபால்பெட்டியில் உள்ள தபால்களை சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் தபால்பெட்டியில் உள்ள தபால்களை ஆடு சாப்பிடும் காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

Recommended Video

    கழுதை போல பேப்பரை உண்ணும் ஆடு.. வைரலாகும் வீடியோ

    சமூகவலைதளப் பக்கங்களில் பல விநோதமான வீடியோக்களும், புகைப்படங்களும் கொட்டிக்கிடக்கின்றன. சில நம்மை மெய்சிலிர்க்க வைக்கும், சில நம்மை சிரிக்க வைக்கும், சில நம்மை குழம்ப வைக்கும். அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை சிரிக்க வைத்து வருகிறது.

    Goat eats mail from letterbox in a viral video

    அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு தபால்பெட்டி அருகே ஆடு ஒன்று நிற்கிறது. அந்த ஆடு மெல்ல அந்த தபால்பெட்டியை திறந்து, அதில் உள்ள தபால்களை சாப்பிடுகிறது.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த ஆட்டின் செயலை பார்த்து சிரித்து வருகின்றனர். கீழே புல்தரை இருந்தும், அதை மேயாமல் தபால் பெட்டியை திறந்து, தபால்களை திண்ணும் அந்த ஆட்டை என்ன செய்வது என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

    Goat eats mail from letterbox in a viral video

    பார்க்க கம்பீரமாக பெரிய சைஸில் இருக்கும் இந்த ஆடு இப்படி பேப்பரை விடாப்பிடியாகச் சாப்பிடுவது பார்க்க ஒருபுறம் காமெடியாகத்தான் இருக்கிறது. பொதுவாக பேப்பரைச் சாப்பிடும் குழந்தைகளை, 'கழுதை மாதிரி பேப்பரை சாப்பிடாதே' எனப் பெரியவர்கள் திட்டுவார்கள். அப்படியென்றால் இந்த ஆட்டை இனி எப்படி அழைப்பது..? என நகைச்சுவையாக சிலர் பதிவு செய்துள்ளனர்.

    எது எப்படியோ.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பது போல, ஏனோ இந்த ஆட்டிற்கு புற்களைவிட காகிதத்தின் சுவை மிகவும் பிடித்திருக்கிறது போல. ஆனால் பாவம் எத்தனை பேர் அந்த தபால் பெட்டியில் ஆசையோடு, கவலையோடு கடிதங்களை எழுதிப் போட்டிருந்தார்களோ.. அனைத்தையும் அந்த ஆடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+