H1b visa: ஐடி ஊழியர்களுக்கு தான் ஆப்பு.. அமெரிக்க கனவில் மண்ணை அள்ளிப் போட்ட ட்ரம்ப்! ‘இவங்களுக்கு’ பயமில்லை!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஹெச்1பி விசா கட்டணத்தை ரூ.1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முடிவு அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் நிலையில், தற்போதைய விசா வைத்திருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் யாருக்கு கட்டண உயர்வு? யாருக்கு விலக்கு? என்பது குறித்து பார்க்கலாம்..
ஐடி சேவையில் முன்னணி இடத்தில் இருக்கும் இந்தியா, பெரும்பாலும் அமெரிக்காவின் வாடிக்கையாளர்களை நம்பியே இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும், அங்குள்ள நிறுவனங்களுக்காகவும் பணியாற்றி வருகின்றனர்.
அவ்வாறு பணியாற்ற அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஹெச்1பி மூலம் சுமார் 7.30 லட்சம் பேர் அமெரிக்காவில் பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

டொனால்டு டிரம்ப்
அந்த வகையில் பார்க்கும்போது 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹெச்1பி விசா அடிப்படையில் அமெரிக்காவில் தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஹெச்1பி விசா கட்டணம் இதுவரை 1.32 லட்சம் ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்து நிலையில் அதனை 88 லட்சமாக உயர்த்தி, அதாவது ஒரு லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தி அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரப்பட்டுள்ளார். இந்த கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பெரும் கவலை கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்கா
அதே நேரத்தில் இந்த புதிய கட்டண முறை புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்தான் எனவும் ஏற்கனவே வசிப்பவர்களுக்கு இல்லை என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, உயர்த்தப்பட்ட கட்டணம் புதிதாக ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இது ஆண்டு தோறும் செலுத்த வேண்டிய கட்டணம் அல்ல, ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணம் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க வேலை விசா
அதே நேரத்தில், ஏற்கனவே ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் அல்லது செப்டம்பர் 21, 2025-க்குள் விண்ணப்பித்தவர்கள், இந்த உயர்வால் பாதிக்கப்படமாட்டார்கள். அதாவது, தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு விசா புதுப்பிப்பு அல்லது நுழைவுக்கட்டணம் என கூடுதல் சுமை இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
எச்1பி விசா என்றால் என்ன?
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கான அனுமதி தான்ஹெச்1பி விசா. தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 65,000 ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் ஆண்டுதோறும் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.
ஹெச்1பி விசா
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் வேலைக்குச் செல்லும் நிபுணர்கள் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் தான். ஹெச்1பி விசா கட்டணம் இவ்வளவு அதிகரிப்பதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்கள் பெரும் சுமையை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரிய நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால், ஸ்டார்ட்அப் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை தவிர்க்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஐடி ஊழியர்கள்
புதிய கட்டண முறையால், ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் வேலைக்காக அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, உள்ளூர் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், எச்1பி விசா கட்டண உயர்வு இந்தியாவின் ஐடி துறைக்கு சவாலாக இருக்கும். அதே சமயம், ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர்.
-
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications