காதலனுக்காக "ஹார்ட்டோடு" சேர்த்து கிட்னியையும் தந்த காதலி! சிகிச்சைக்கு பின் நடந்த ட்விஸ்ட்! பாவங்க
நியூயார்க்: தனது காதலனுக்காக கிட்னி கொடுத்த பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்தான் பலரை பரிதாபப்பட வைத்துள்ளது.
காதலுக்காக பலரும் எதை எதையோ இழப்பார்கள். உலகம் முழுக்க காதலுக்காக பெண்ணும், ஆணும் பல விஷயங்களை இழந்து இருக்கிறார்கள், விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் கோலீன் லீ என்ற பெண் தனது கிட்னியை இழந்து இருக்கிறார். ஆம் காதலனுக்கு பெண்கள் இதயத்தை இழந்தது போய் இவர் கிட்னியை இழந்துள்ளார்.

இதயம்
கோலீன் லீ சுமார் 6 வருடங்களுக்கு முன் லீ காம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் லீ காமிற்கு இரண்டு கிட்னியும் சரியாக வேலை செய்யாதது தெரிய வந்துள்ளது. இரண்டு கிட்னியும் சில நாட்களில் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டோனருக்காக அந்த இளைஞர் காத்து இருந்துள்ளார்.

மாற்று சிகிச்சை
இந்த நிலையில், காதலி கோலீனின் கிட்னி காதலனுடன் ஒத்துபோய் உள்ளது. இதையடுத்து காதலி கோலீன் கிட்னியை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதுவும் இலவசமாக கிட்னியை கொடுக்க முடிவு செய்துள்ளார். கிட்னியை வெற்றிகரமாக கொடுத்த பின், காதலனும் குணமடைந்துள்ளார். இதையடுத்து அவர்கள் சில வருடங்கள் சந்தோசமாக இருந்துள்ளனர்.

அதிர்ச்சி செய்தி
அதன்பின்தான் அந்த காதலிக்கு தனது காதலன் தன்னை ஏமாற்றுவது தெரிய வந்துள்ளது. வேறு பெண்ணுடன் லீ காம் தொடர்பில் இருந்தது கோலீன் லீக்கு தெரிய வந்துள்ளது. வேறு சில பெண்களுடன் அவர் உடல் ரீதியாகவும் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்து கோலீன் லீ மனம் உடைந்து போய் உள்ளார். இவனுக்கா போய் கிட்னியை கொடுத்தோம் என்று மனம் உடைந்துள்ளார்.

ஏமாற்றினார்
இதையடுத்து உடனே தனது காதலனை பிரேக் அப் செய்துள்ளார். இதையடுத்து தற்போது கோலீன் டிக்டாக்கில் போட்டுள்ள வீடியோதான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. நான் என் காதலனுக்காக கிட்னியை கொடுத்தேன். ஆனால் அவர் அதன் மூலம் உயிர் பிழைத்துவிட்டு வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்து, என்னை ஏமாற்றிவிட்டார். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பெண்ணின் வீடியோ இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications