சொந்த தம்பி.. உலகத்திலேயே அதிசய சம்பவம்.. சகோதரனின் குழந்தையை பெற்றெடுத்த அக்கா.. நெகிழ்ந்த மனங்கள்
நியூயார்க்: உலகிலேயே அபூர்வமான மற்றும் ஆச்சரியமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதை பார்த்த பலரும் மலைத்தும், நெகிழ்ந்தும் வருகிறார்கள்..!!
வியக்கத்தக்க மாற்றங்கள் நாளுக்கு நாள் உலகில் நடந்து வருகின்றன.. இதில், சாத்தியமில்லாததையும் சாத்தியமாக்கும் சாத்தியக்கூறுகளை, நம்முடைய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் அடித்தளமாக அறிவியல் அமைந்து வருகிறது. இந்த நவீன உலகில், விஞ்ஞானத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி, சிலசமயம் நம்மை வியக்க வைக்கிறது. சில சமயம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.. சில சமயம் நம்மை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இதோ அப்படி ஒரு சம்பவம்தான் இப்போதும் நடந்துள்ளது.
இளம்பெண்: அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. அவரது பெயர் சப்ரினா. 30 வயதாகிறது.. இவர் சொத்து விவகாரங்களை கவனிக்கும் நிறுவனத்தில், மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.. அவரது பெயர் ஷான் பெட்ரி.. நன்றாக படித்தவர். ஆனாலும், ஷான் பெட்ரி ஓரின சேர்க்கையாளராக இருந்து வருகிறார்.. அதனால், இன்னொரு ஆண் நண்பரை கல்யாணம் செய்து கொண்டார். அவருடன்தான் இப்போது ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
இருவருமே ஓரின சேர்க்கை என்பதால், இவர்களால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க இயலாது. ஆனாலும் குழந்தை ஆசை வாட்டி வதைத்தது. எனவே, தன்னுடைய அக்கா சப்ரினாவின் உதவியை நாடினார்..
கருப்பை: சகோதரனின் நிலைமையையும் உணர்வையும் முழுமையாக புரிந்துகொண்டவர் என்பதால், சப்ரினா இதற்கு சம்மதித்தார்.. இதற்காக மருத்துவமனையை அணுகினார்.. சொந்த தம்பி பெட்ரியின் விந்தணுவை சரோகேசி (Surrogacy) என்ற முறையை பயன்படுத்தி, சப்ரினாவின் கருப்பைக்குள் வைத்தனர் டாக்டர்கள்.. கருவும் நன்றாக வளர துவங்கியது... குழந்தை உருப்பெற்றது.. ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தது.. 10 மாதம் முடிந்ததுமே, ஆண் குழந்தையை சப்ரினா பெற்றெடுத்தார்.

இப்போது அந்த குழந்தைக்கு 5 மாதமாகிறது.. இப்போதுதான், அந்த குழந்தையின் போட்டோவை, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.. இப்போது அந்த குழந்தைக்கு தாயாக இல்லாமல், அத்தையாக அன்பை கொட்டி வருகிறார் பெட்ரி..
நெகிழ்ச்சி: இன்னும் தன்னுடைய தம்பியின் குழந்தைகளை பெற்றெடுக்க ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்.. சகோதரி ஒருவர், தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த இந்த சம்பவம் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் கூட்டிவருகிறது.












Click it and Unblock the Notifications