Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 நாய்களை.. "சாகும்வரை" பலாத்காரம்.. டார்க் ரூம் வேற.."முதலை நபர்" சொன்னதை கேட்டு வெலவெலத்த நீதிபதி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கோர்ட்டில் நடக்கும் பயங்கரமான வாதங்களை பார்த்ததுமே, நீதிபதி வெலவெலத்து போய்விட்டாராம். உடனடியாக கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டாராம்.. அப்படி என்ன நடந்தது?

பாலியல் வன்கொடுமை என்றாலே, பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான் நினைவுக்கு வரும்.. ஆனால் சில காமப்பிண்டங்கள், வயதான பெண்களிடமும், குழந்தைகளிடமும்கூடஇப்படி தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகள் வெளியாகி வருகின்றன.. அவ்வளவு ஏன்? இறந்துபோன சடலத்தையும் இதுபோன்ற காமுகர்கள் விட்டு வைப்பதில்லை.

Heartbreaking Incident and British Crocodile expert confesses over 40 dogs in Australia

ஆண் நண்பர்: அதேசமயம், ஒரு ஆண் நபரை சில பெண்கள் கடத்தி கொண்டுபோய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வும் நம்முடைய நாட்டில் நடந்துள்ளது.. ஒருகட்டத்தில் மனிதர்களையும்தாண்டி, சில பேர் மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவமும் பெருகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு டெலிவரி பாய் ஒருவர், சாலையோரம் இருந்த நாய் குட்டியை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்தார். இன்னொரு நபர், தன்னுடைய வீட்டுக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த நாயை வன்கொடுமை செய்தார்.. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து, இவர்கள் கைதானார்கள்.

வீடியோ: அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமாகிவிட்டது.. சில நாட்களுக்கு முன்பு, மிசிசிபி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமை செய்தார்.. அதை அதனை வீடியோவாகவும் எடுத்து தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பெண்ணுக்கு 19 வயதாகிறது. டிக்டாக் பிரபலமும்கூட.

ஜெர்மன் ஷெப்பர்டு நாயை வளர்த்து வந்ததுடன், அந்த நாயை பலாத்காரம் செய்து, அதனை வீடியோவும் எடுத்திருந்தார். கடைசியில் இவரையும் போலீசார் கைது செய்தார்கள். இதோ இதைவிட இன்னொரு பயங்கரம் அதே அமெரிக்காவில் நடந்துள்ளது..

சேனல்கள்: இவர் பெயர் ஆடம் பிரிட்டன்.. 51 வயதாகிறது.. பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்களின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார்..

Heartbreaking Incident and British Crocodile expert confesses over 40 dogs in Australia

வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.. முதலைகளை கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராம். அதனால், 'முதலை' மனிதர் என்றாலே அமெரிக்காவில் இவர் ரொம்ப ஃபேமஸாம்.

இவ்வளவு பெரிய படிப்பை படித்துள்ளதுடன், மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதைகூட மறந்துவிட்டு, மிகவும் கேவலமாக நடந்து கொண்டுள்ளார்.. அதுவும் வாயில்லா ஜீவன்களிடம்.

ஸ்பெஷல் கவனம்: விலங்குகளை பலாத்காரம் செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம்.. இதில் நாய்கள் என்றால் கூடுதல் ஸ்பெஷல் கவனம் செலுத்துவாராம்.. நாய்களை குறிவைத்து, பலாத்காரம் செய்ததும், அவை தொடர்பான வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஆடம் பிரிட்டன்.. இந்த வீடியோக்களை பார்த்ததுமே பலரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. விவகாரம் கோர்ட் வரை சென்றது.. வடக்கு ஆஸ்திரேலிய சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடந்தது.

மொத்தம் 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக 4 குற்றங்கள் போன்றவற்றை ஆடம் பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளார்.

பலாத்காரம்: அதாவது, பலாத்காரம் செய்வதே, அதன்மூலம் அந்த விலங்குகளை துன்புறுத்தி, அதில் இன்பம் அடைபவராம்.. சாகும்வரை அந்த விலங்குகளை பலாத்காரம் செய்வாராம்.. இதையெல்லாம் கேட்டு நீதிமன்றமே கதிகலங்கி போய்விட்டது. இது தொடர்பான வாதங்கள் கோர்ட்டில் நடக்கும்போது, பாதுகாப்பு ஊழியர்களையும், பொதுமக்களையும், வழக்கு நடக்கும் அந்த இடத்தைவிட்டே வெளியேறுமாறு நீதிபதி கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்..

நாய்கள் மீது எப்போதுமே தனி மோகம் இவருக்கு இருந்திருக்கிறது.. நாய்களை பலாத்காரம் செய்வதற்காகவே, ஸ்பெஷலாக ஒரு ரூம் டிசைன் செய்துள்ளார். இதற்கு டார்ச்சர் ரூம் என்று பெயரும் வைத்திருக்கிறார்..

கொடூரம்: பல நாய்களை பலாத்காரம் செய்து கொன்றது இந்த ரூமில்தான்.. ஒவ்வொரு முறை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கும்போதும், தன்னுடைய முகத்தை மறைத்து கொள்வாராம்.. முகம் இல்லாத வெறும் பாலியல் வீடியோக்களை மட்டும் போஸ்ட் செய்து வந்துள்ளார். அதுமட்டுமல்ல, இவரை போலவே நாய்கள் மீது யாருக்கெல்லாம் காமவெறி உள்ளதோ, அதுபோன்றவர்களை எல்லாம் தேடிப்பிடித்துள்ளார்.. அந்த சேடிஸ்ட்களை எல்லாம் ஒருங்கிணைத்து டெலகிராம் மூலம் க்ரூப் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

வீடுகளில் வளர்க்கப்படும் கொழுகொழு, செழிப்பான நாய்கள் என்றால் இவருக்கு பிரியமாம்.. அதனால், அந்த நாய்களுக்கென தனியாக குறி வைத்திருக்கிறார்.. அதனால், இதற்காகவே ஒரு விளம்பரம் செய்திருக்கிறார்..

Heartbreaking Incident and British Crocodile expert confesses over 40 dogs in Australia

டிரான்ஸ்பர்: நீண்ட தொலைவுக்கு வீடு மாறுபவர்கள் அல்லது வேறு எங்காவது டிரான்ஸ்பர் ஆகி செல்பவர்கள் இருக்கிறீர்களா? அப்படி நீங்கள் குடியேறி சென்றால், நீங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அதனால், என்னிடம் விட்டு செல்லுங்கள், தனியாக பராமரிப்பு மையத்தை நான் செயல்படுத்துகிறேன் என்று விளம்பரப்படுத்தி உள்ளார்.

நாய்களின் பழைய போட்டோக்களை ஓனர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களை ஏமாற்றியும் வந்திருக்கிறார். உலகமறிந்த விலங்கு நிபுணர் என்பதால், ஆடம் பிரிட்டன் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை.. ஒரே ஒரு பெண் மட்டும், ஆடம் பிரிட்டனின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்து, புகார் தந்துள்ளார். அதற்குபிறகுதான், அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.. இப்போது எல்லா குற்றத்தையும் இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.. நாய்கள் சம்பந்தமாக அனைத்து வாக்குமூலத்தையும் தந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+