அமெரிக்காவை மூச்சு திணறவைக்கும் காற்று மாசு.. போராட்டத்தை தொடங்கிய சூழலியல் ஆர்வலர்கள்
நியூயார்க்: கனடாவில் பரவி வரும் காட்டு தீ அமெரிக்காவையும் கடுமையா பாதித்துள்ள நிலையில், பள்ளிகள், ரெஸ்டாரண்டுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல சூழலியல் ஆர்வலர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவின் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டின் கோடை காலத்திலும் கனடா காட்டு தீயுடன் போராடி வரும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அளவுக்கு அதிகமாகவும், கட்டுக்கடங்காமலும் சென்றிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இந்த தீயை அணைக்க வீரர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர்.

மற்றொருபுறம், இந்த தீயால் ஏற்பட்டுள்ள புகை, அமெரிக்காவை மூச்சு திணற வைத்திருக்கிறது. அமெரிக்க கிழக்கு கடற்கரை முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீறி வெளியே வருவதாக இருந்தால் என்95 மாஸ்க்கை அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வெர்மான்ட் முதல் தென் கரோலினா, மேற்கு ஓஹியோ மற்றும் கன்சாஸ் வரை காற்றில் நுண்ணிய துகள்கள் இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவசர சிகிச்சை வழங்க மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாக வருகின்றன, மேலும் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புகை மண்டலம் 12கி.மீ உயரம் வரை உயர்ந்திருப்பதாலும், காற்றின் தரம் மோசமாக இருப்பதாலும், இந்த பிரச்னையை தீர்க்க உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை கேட்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜொ பைடன் கூறியுள்ளார். இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் வெள்ளை மாளிகைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications