கமலா ஹாரிஸ் தோற்றதை விடுங்க.. அதைவிட பெரிய ஷாக் இதுதான்.. டிரம்ப் சத்தமின்றி செய்த சம்பவம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் படுதோல்வி அடைந்து உள்ளார். ஆனால் அவரின் தோல்வியை தாண்டி.. வேறு ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயமும் நடந்து உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 6,78,71,576 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் டிரம்ப் 7,25,54,584 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு சதவிகித அடிப்படையில் 47.6 சதவிகித வாக்குகளை கமலா ஹாரிஸ் வென்றார். இன்னொரு பக்கம் டிரம்ப் 51 சதவிகித வாக்குகளை வென்றுள்ளார். மக்கள் வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை முந்தி உள்ளது. அதாவது எலக்ட்ரல் வாக்கு தாண்டி மக்களின் மொத்த வாக்கிலும் டிரம்ப் இந்த முறை சாதனை செய்துள்ளார்.

அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் மட்டும் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 295 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார்.
மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் டிரம்ப் 300 எலக்ட்ரல் வாக்குகள் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த இரண்டு மாகாணங்களிலும் டிரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார்.
சாதனை:ஆனால் அவரின் வெற்றியை தாண்டி.. வேறு ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயமும் நடந்து உள்ளது. அதன்படி கமலா ஹாரிஸை விட மிக குறைவாக.. பாதிக்கு பாதி நிதி திரட்டியும் கூட டிரம்ப் வென்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டுவது மிக முக்கியமான அங்கம். முக்கியமாக தேர்தலில் வெற்றிபெற நிதி திரட்டுவது மிக முக்கியம்.
ஏன் கட்சிக்கு உள்ளே நடக்கும் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் தேர்தல் போட்டிக்கு தேர்வாவவதற்கு கூட நிதி திரட்டுவது முக்கியம். இந்த தேர்தலில் 1 பில்லியன் டாலரை கமலா ஹாரிஸ் திரட்டினார். இதில் 40 சதவிகிதம் சிறிய அளவிலான டோனர்கள் மூலம் கிடைத்தது . $586 மில்லியன் டாலர் பல கமிட்டிகள் மூலம் கிடைத்தது.
ஆனால் டொனால்ட் டிரம்ப் வெறும் $382 மில்லியன் டாலர் மட்டுமே திரட்டினார். அதில் இதில் 28 சதவிகிதம் சிறிய அளவிலான டோனர்கள் மூலம் கிடைத்தது . மற்ற தொகை பல கமிட்டிகள் மூலம் கிடைத்தது. அதிலும் கடைசியாக டிமோதி மெலன் என்ற டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவாளர்.. $197 மில்லியன் டாலரை டிரம்பிற்கு நிதி உதவியாக வழங்கினார்.
இது போக ரிச்சர்ட் மற்றும் எலிசபெத் உய்ஹ்லீன், கேசினோ அதிபர் மிரியம் அடெல்சன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மற்றும் ஹெட்ஜ் நிதி முதலீட்டாளர் கென்னத் கிரிஃபின் ஆகியோர் டிரம்பிற்கு ஆதரவாக நிதி வழங்கினார்கள். கமலா ஹாரிஸை விட குறைவான நிதி வாங்கியும் கூட டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications