சீனா + அமெரிக்கா + துருக்கி.. சர்வதேச நாடுகளை வைத்து பாகிஸ்தான் ஆடிய ஆட்டம்! என்ன நடந்தது?
நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பின் சீனா + அமெரிக்கா + துருக்கி போன்ற சர்வதேச நாடுகளின் செயலும் இருக்கின்றன.
பாகிஸ்தான் மீதான தாக்குதலை நேற்று முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து நேற்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் பின் நேற்று இரவு மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறிய நிலையில் உடனே இந்திய ராணுவம் தலையிட்டு பதிலடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த எல்லையில் அமைதி திரும்பியது.
உலக நாடுகள் சப்போர்ட்:
இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி, சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தானிடம் 6 வகையான டிரோன்கள் மட்டுமே உள்ளன. அதன் லிஸ்ட் இங்கே.
1. Bayraktar TB2
விற்பனை செய்த நாடு: துருக்கி
வகை: நடுத்தர உயர நீண்ட தூரம் தாங்கும் (MALE) ட்ரோன்
திறன்கள்: துல்லியமான வெடிமருந்துகளுடன் ஆயுதம் ஏந்தி செல்லக்கூடியவை. கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன
2. விங் லூங் II
விற்பனை செய்த நாடு: சீனா
வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய ஆயுதம் ஏந்திய ட்ரோன்
திறன்கள்: நீண்ட தூர தாக்குதல், கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல்
3. CH-4 (ரெயின்போ-4)
விற்பனை செய்த நாடு: சீனா
வகை: நீண்ட தூரம் செல்ல கூடிய போர் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்
திறன்கள்: துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும்
4. ஷாபர்-II
விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (பாகிஸ்தானின் உலகளாவிய தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் - GIDS ஆல் உருவாக்கப்பட்டது)
வகை: போர் UAV. நீண்ட தூரம் செல்லாது.
திறன்கள்: வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளுடன் உளவு பார்த்தல் மற்றும் போர் திறன்கள்
5. பர்ராக்
விற்பனை செய்த நாடு: உள்நாட்டு (சீன வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது)
வகை: ஆயுதம் ஏந்திய UAV
திறன்கள்: கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதல்கள்; பாகிஸ்தானின் முதல் ஆயுதமேந்திய UAV
6. அன்கா (சாத்தியமான கையகப்படுத்தல் அல்லது ஆர்வம்)
தோற்றம்: துருக்கி
வகை: நீண்ட தூரம் செல்ல கூடியது.
மேற்கண்ட லிஸ்டில் 6ல் 2 பாகிஸ்தான் உருவாக்கியது. இந்த 2ம் நீண்ட தூரம் செல்ல கூடியது அல்ல. அதேபோல் வலுவான திறன் கொண்டது அல்ல. சிறிய வகை. அப்படி என்றால் பாகிஸ்தான் மீதம் உள்ள 4 டிரோன்களை மட்டுமே பயன்படுத்தி இருக்க முடியும்.
இந்த 4ம் சீனா அல்லது துருக்கி மூலம் உருவாக்கப்பட்டது. சீனா, துருக்கியின் இந்த டிரோன்களைத்தான் இந்தியா அடித்து காலி செய்து நொறுக்கியது.
அமெரிக்க ஆதரவு:
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்துள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் செய்யும் நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான முக்கிய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது இந்தியா.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரூ.8,542 கோடி கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு.
IMF விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது இந்தியா. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக IMF-க்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறையான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பாக். தவறியதை காரணம் காட்டி, பாகிஸ்தானில் IMF திட்டங்களின் செயல்திறனை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. IMF-ன் உறுப்பினரான இந்தியா, இவ்விவகாரத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் கடன் வழங்குதலுக்கான வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது.
அதோடு போர் நிறுத்தம் என்று கூறி இந்தியா வெற்றிபெற வாய்ப்பு இருந்த நேரத்தில் அமெரிக்கா உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்து இருக்கிறது. இப்படி முக்கிய நாடுகள் பாகிஸ்தான் பக்கம் சென்றது சர்வதேச அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications