இந்தியர்களுக்குத்தான் ஆப்பு.. டிரம்ப்பின் கோல்டன் விசாவால்.. அதிகம் பாதிக்கப்பட போவது இந்தியாதான்?
நியூயார்க்: அமெரிக்காவில் கோல்டு கார்டு விசா கொண்டு வரப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்டு கார்டு விசா என்றால் என்ன?
அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.

மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.
இனி முதலீட்டாளர்கள் விசா கிடையாது?
ஏற்கனவே அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் உள்ளது. இதை EB-5 விசாக்கள் என்று அழைப்பார்கள். EB-5 கள் 1990 இல் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை உருவாக்க கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.
இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது. அதோடு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்தியர்கள் பாதிப்பு
அவரின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்டு விசா இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் EB-5 விசாக்கள் மூலம் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே நிரந்தர விசா கிடைக்கும். அதாவது EB-5 விசாக்கள் வாங்க 8 கோடி ரூபாய் கட்டினால் போதும். ஆனால் இப்போது புதிய விதி காரணமாக 50 கோடி ரூபாய் வரை கட்ட வேண்டும்.
இதனால் இந்தியர்கள் எளிதாக இந்த விசாவை வாங்க முடியாது. ஏற்கனவே EB-5 விசாக்கள் வாங்க திட்டமிட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு இல்லாமல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது. அப்படி சரிவதால் போக போக 5 மில்லியன் டாலர் மதிப்பு சரியும். இதனால் இந்தியர்கள் செலுத்த வேண்டிய தொகையின் இந்திய மதிப்பு தொடர்ந்து உயரும்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் , கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்கள்.. செல்வந்தர்களாக இருப்பார்கள், அவர்கள் வெற்றி பெற்ற நபர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் நிறைய பணம் செலவழிப்பார்கள்.. எங்களுக்கு நிறைய வரிகளை செலுத்துவார்கள்.. அமெரிக்காவில் நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள், இதனால் அமெரிக்கா மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.. அடுத்த சில நாடுகளில் 1 கோடி கோல்டன் விசாக்களை விற்க முடிவு செய்துள்ளோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்" என்று கூறி உள்ளார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications