3 அதிமுக எம்எல்ஏக்களை போல மாறிய டிரம்ப்.. பதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. 1 கோடி பேர் கடிதம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக, 10 மில்லியன் அமெரிக்க மக்கள், அரசியல் வல்லுநர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக, 10 மில்லியன் அமெரிக்க மக்கள், அரசியல் வல்லுநர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
இந்தியாவில் மாநில சட்டசபைகளில் செய்யப்படுவது போல, தகுதி நீக்கம் செய்யப்படும் முறைதான் அமெரிக்காவை impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது. இது குற்றம் செய்த அரசியல் தலைவர்களை தண்டிக்கும் பொருட்டு கொண்டு வரப்படும் தீர்மானம் ஆகும்.
அதாவது, ஒரு அரசியல்வாதி தவறு செய்தாலோ, சட்டத்தை புறம்பாக பயன்படுத்தினாலோ, பல்வேறு நிலைகளில் அவருக்கு எதிராக, அமெரிக்காவில் இம்பீச்மெண்ட் கொண்டு வரப்படும்.

அதிபர் டிரம்ப்
தற்போது அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதான விசாரணை தொடக்கப்பட வேண்டும். இதில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், உடனடியாக அவர் தண்டிக்கப்படுவர். இதனால் அவர் பதவி பறிபோகும்.

என்ன காரணம்
இதற்கு பல்வேறு காரணங்களை அந்நாட்டு மக்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி,
- டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார்.
- டிரம்ப் சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதை செய்கிறார்.
- ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார்.
- வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார்.
- வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.
- நாடாளுமன்றத்தில் தேவையில்லாத சட்டங்களை தாக்கல் செய்து, அதை செயல்பட விடாமல் தடுக்கிறார், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

எத்தனை பேர்
இந்த குற்றச்சாட்டை ஒருவர், இருவர் வைக்கவில்லை. மொத்தம் 10 மில்லியன் பேர் டிரம்பிற்கு எதிராக இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அந்நாட்டு நீதித்துறைக்கு இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதில் நிறைய அரசியல்வாதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

உடனே விசாரணை
இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் 10 மில்லியன் பேர் தற்போது கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதில் எப்போது வேண்டுமானாலும் விசாரணை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க போகும் சில தலைவர்கள் கூட, இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications