சூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபை அனுமதி அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று அதிகாலை அந்நாட்டு சபாநாயகர் நான்சி பெலோசி வெளியிட்டார். இதனால் டிரம்பிற்கு எதிரான தகுதி நீக்க விசாரணை துரிதம் அடைந்துள்ளது.

அமெரிக்காவில் அதிபரை அல்லது உயர் அதிகாரிகளை தகுதி நீக்கம் செய்யும் முறை மிகவும் சிக்கலானது. இந்தியாவில் மாநில சட்டசபைகளில் செய்யப்படுவது போல, தகுதி நீக்கம் செய்யப்படும் முறைதான் அமெரிக்காவை impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது.

இது குற்றம் செய்த அரசியல் தலைவர்களை தண்டிக்கும் பொருட்டு கொண்டு வரப்படும் தீர்மானம் ஆகும். தற்போது அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன விசாரணை

என்ன விசாரணை

இதனால் அவர் மீதான விசாரணை தொடக்கப்பட வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார். டிரம்ப் சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதை செய்கிறார், என்று ஒரு பக்கம் புகார் வைக்கப்படுகிறது.

வேறு என்ன

வேறு என்ன

ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார். வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார். வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். என்று இன்னொரு பக்கம் புகார் வைக்கப்படுகிறது.

முக்கிய புகார்

முக்கிய புகார்

அதேபோல் டெமாக்ரடிக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுகிறார். உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசி இருக்கிறார் என்று பல புகார்களை அடுக்கி உள்ளனர்.

என்ன விசாரணை

என்ன விசாரணை

இந்த புகார்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து செய்யலாம் என்று அந்நாட்டு பிரநிதிகள் சபை தெரிவித்துள்ளது. புகார்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. டிரம்ப் தவறான முடிவுகளை எடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அதனால் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பேசினார்

பேசினார்

அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். எங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவை காப்பாற்ற வேண்டும். அதற்காக இதை நாங்கள் செய்கிறோம் என்று அவர் தனது பேச்சில் இன்று அதிகாலை குறிப்பிட்டார்.

முடியாது

முடியாது

ஆனால் இன்னொரு பக்கம் இந்த விசாரணையில் ஆஜராக முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பு மறுத்துவிட்டது. இதில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், உடனடியாக அவர் தண்டிக்கப்படுவர். இதனால் அவர் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தத்க்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+