முதல் அடி நமக்குதான்.. டிரம்ப்பின் புதிய வரி யோசனையால் இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து!
நியூயார்க்: அமெரிக்காவை மற்ற நாடுகள் சமமாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ள டிரம்ப் விரைவில், Reciprocal Tariffs எனும் வரி திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அப்படி நடந்தால் முதல் அடி இந்தியாவுக்குதான் விழும். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவுக்கான எச்சரிக்கை
மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley), நமூரா (Nomura) ஆகியவை உலகளாவிய முன்னணி நிதி சேவை நிறுவனங்களாக இருக்கிறது. இவை இரண்டும்தான் தற்போது இந்தியா குறித்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. ஆசிய நாடுகள் அதிக ஒப்பீட்டு சுங்க வரியை கொண்டிருப்பதாக (relative tariff rates) இந்நிறுவனம் கூறியுள்ளது.
அதாவது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு நம்முடைய அரசு 20% இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. அதே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு வெறும் 5% தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வித்தியாசத்தைதான் relative tariff rates என்று சொல்கிறார்கள். இதனால் இந்தியாவுக்குதான் பாதிப்பு அதிகம் என்று நிதி சேவை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
டிரம்ப் பேசியது என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "அமெரிக்காவை மற்ற நாடுகள் சமமாக நடத்த வேண்டும். எனவே நாங்கள் reciprocal tariffs குறித்து யோசித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். மேலே குறிப்பிட்டதை போல அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 20% வரியை விதித்திருப்பதை போலவே, இந்திய பொருட்களுக்கும் அமெரிக்காவும் 20% வரியை விதிக்க வழிவகை செய்வதுதான் reciprocal tariffs என அழைக்கப்படுகிறது.
இப்படி நடந்தால் அமெரிக்காவில் விற்கப்படும் இந்திய அரசியின் விலை தாறுமாறாக உயரும். உதாரணத்திற்கு 50 கிலோ இந்திய அரிசி 100 டாலருக்கு விற்கப்படுகிறது எனில், வரி உயர்த்தப்பட்டால் இதே 50 கிலோ அரிசி 120 டாலராக விலை உயரும். எனவே மக்கள் இந்திய அரிசிக்கு மாற்றாக இந்தோனேஷியா அரிசியை வாங்கி செல்வார்கள். இதனால் இந்தியாவுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும்.
ஏன் இந்தியாவுக்கு அதிக பாதிப்பு?
1. அமெரிக்காவின் வேளாண் விளை பொருட்கள் (ஆப்பிள், அக்ரூட், பாதாம்)
2. மருத்துவ கருவிகள் (ஸ்டன்ட், முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை கருவிகள்)
3. மதுபான பொருட்கள் (அமெரிக்க தயாரிப்பு விஸ்கி, வைன் உள்ளிட்டவை)
4. பைக்குகள் (ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிக வரி இருந்தது. தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது)
இவையெல்லாவற்றுக்கும் இந்தியா அதிக வரியை விதிக்கிறது. அதேபோல அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு வரியை விதித்தால் நாட்டின் பொருளாதாரம் படுத்துவிடும்.
எப்படி தடுப்பது?
இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனில், அமெரிக்க அரசு reciprocal tariffs திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வர்த்தக உறவுக்கு அமெரிக்க ஆதரவு நாடுகளை தவிர்த்துவிட்டு மற்ற நாடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இதை பயன்படுத்தலாம். ரஷ்யாவிலும் இன்னும் சில நாடுகளிலும் கூட இந்திய பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இதை செய்தால் தப்பித்துக்கொள்ளலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் யோசனை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?












Click it and Unblock the Notifications